election2021

img

3000 கோடி சொத்து சேர்ந்தது எப்படி? அமைச்சர் வீரமணியைப் பார்த்து அவரது மாப்பிள்ளை கேட்கிறார்...

“அமைச்சர் கே.சி.வீரமணி இந்த முறையும் ஜெயிச்சா திரும்பவும் நாமஅஞ்சு வருஷமும் அடிமையா தான் வாழனும்.அந்த நிலைமை நமக்கு மீண்டும் வரணுமா? இதனால தான் சொல்லுறேன் இந்த முறை வீரமணிக்கு ஓட்டு போடக்கூடாது”.- இப்படிப் பேசி இருப்பது வேறு யாரும் இல்லங்க, அமைச்சர் கே.சி.வீரமணியின் மூத்த சகோதரி மகன் தென்னரசு சாம்ராஜ்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கும் தென்னரசு சாம்ராஜ், கட்சிநிர்வாகிகளைச் சந்தித்து உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில்,”சாதாரணமாக பீடி வியாபாரம் செய்து வந்தவர் அமைச்சரானார். அன்றைக்கு இருந்த சொத்து பட்டியலும் இன்றைக்குக் கார், பங்களானு 3000 கோடிக்குச் சேர்த்து வைத்திருக்கும் சொத்து பட்டியலும் என்னிடம் இருக்குது.
பொறந்த உடனே பென்ஸ் காரில் சுற்றி வந்தவர் போல் பேசித்திரியும் அமைச்சர் வீரமணியின் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் எங்களுக்குத் தெரியும்.ஊர்ல பீடி சுற்றிக் கொண்டிருந்த இவருக்கு3000 கோடி ரூபாய்க்கு  எப்படிச் சொத்து சேர்ந்தது? அமைச்சரானதற்குப் பிறகு சொந்தத் தொகுதி மக்களுக்கு எதையும் செய்யாமல் தன்னையும் குடும்பத்தை மட்டுமே வளர்த்துக்கொண்டார்.

நாங்களும் அண்ணா திமுக கட்சியிலதான் இருந்தோம். கட்சிக்காரர்களை மட்டும் இல்ல,உறவுக்காரங்க யாரையும் எப்பவுமே மதித்ததுகிடையாது.அவரது தலைவர் எடப்பாடி எப்படித் துரோகம் செஞ்சாரோ, அதுபோல இவரும் துரோகத்திற்குப் பெயர் போனவர் தான்.இந்தத் தேர்தலில் நிச்சயமா வீரமணி ஜெயிக்கக் கூடாது. டெபாசிட்டை இழக்கணும்.எனக்கு ஓட்டு போடுங்க. வெற்றி பெற்றால் உங்களோடு ஒருவனாக இந்த ஊரிலேயே வசிப்பேன். இல்லையென்றால் இந்த ஊரை விட்டே வெளியேறி விடுவேன். இது எனது சபதம்” எனப் பொறிந்து தள்ளியிருக்கிறார் சாம்ராஜ்.

ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி ஜோலார்பேட்டை. 2011ஆம் ஆண்டு அந்தத் தொகுதியின் முதல் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே. சி.வீரமணி. அத்துடன் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பிடித்துச் சீனியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர். கடந்த 2016 ஆம் ஆண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாகவும் அமைச்சரானார். மூன்றாவது முறையாகஜோலார்பேட்டையில் அதிமுக வேட்பாள ராகக் களம் இறங்கும் அவர் இந்த முறை கரையேற மாட்டார் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிவதால் கலக்கம் அடைந்துள்ளார்.அமைச்சர் கே.சி.வீரமணியை தோற்கடிப்பது மட்டுமல்ல, டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் என்று அமமுக சார்பில் களமிறங்கியிருக்கும் அவரது சகோதரி மகன் தென்னரசு சபதமேற்றது, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்துவிட்டது.