திருவனந்தபுரம்:
கேரளத்தில் ஏப்ரல் 6-இல் நடைபெறும் வாக்குப்பதிவு மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்கும் கார்ப்பரேட் சார்பு புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தைவலுப்படுத்தவும் உதவும் என்று சீத்தாராம் யெச்சூரிகூறியுள்ளார்.
கேரள மாநிலம் பேப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் எல்டிஎப் வேட்பாளர் பி.ஏ. முகமது ரியாஸிற்கு ஆதரவு திரட்டும் வகையில், கடந்த புதனன்று (மார்ச் 24) மண்ணூர் திடலில் மாபெரும்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று பரப்புரை மேற்கொண் டார். அப்போது அவர் கூறியதாவது:
இடது ஜனநாயக முன்னணியை அதிகாரத்திற்கு கொண்டு வருவதன் மூலம் கேரளா மீண்டும் வரலாறு படைக்கும். 1957-இல் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டுவந்த கேரளம் மீண்டும் நாட்டை வழிநடத்தும்.மாற்றுக் கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும் இந்தியாவுக்கு முன்மாதிரியாக விளங்கும் எல்டிஎப் அரசு தொடரவேண்டியது தேசத்தின் உறுதித் தன்மையை பாதுகாப்பதற்கு அவசியமாகும். ஒரு கையில் தேசியக் கொடியையும், மறுகையில் அரசமைப்பு சாசனத்தையும் தூக்கிப்பிடித்து நாட்டைப் பாதுகாக்க மக்கள் போராடுகின்றனர். அவர்களுக்கு இடது ஜனநாயக முன் னணி வலுவூட்டுகிறது. ஜனநாயகத்தையும் அரசமைப்பையும் பாதுகாக்கப் போராடும் அனைவருக்கும் கேரள அரசு ஊக்கம் அளிக்கிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்தப்போவது இல்லை என்று இந்த அரசு அறிவித் துள்ளது. ஐந்தாண்டு இடது ஜனநாயக முன்னணி ஆட்சி, முஸ்லிம்களாகவோ, இந்துக்களாகவோ, அல்லது இதர மதங்களாகவோ அல்லாமல் மனிதர்களாக வாழக்கூடிய மாநிலம் கேரளம் என்பதைநிரூபித்தது. அந்த முன்மாதிரிகள் பாதுகாக்கப் பட வேண்டும்.பொருளாதார பாதுகாப்பைத் தகர்த்தும், அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை தகர்ப்பதன் மூலமும் இந்து ராஷ்டிராவைக் கட்டியெழுப்புவதை பாஜக அரசு நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால் வெறுப்பும் பாகுபாடும் அல்ல... மனிதாபிமானமே வளர்த்தெடுக்கப்பட வேண்டியது என்பதை இடது ஜனநாயக முன்னணி அரசுநிரூபித்துக் காட்டியுள்ளது. நாட்டின் எதிர்காலம் இடதுசாரிகளின் கையில்தான் உள்ளது.இவ்வாறு யெச்சூரி கூறினார்.
**************
குடியுரிமைச் சட்டத்தின் பெயரால் அரசியல் விளையாட்டில் பாஜக
திருரூர் எல்டிஎப் வேட்பாளர் கபூர் பி லில்லீஸை ஆதரித்து நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய யெச்சூரி, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பெயரில் பாஜகவும், மத்திய அரசும் வாக்கு வங்கி அரசியலை முன்வைத்து விளையாடுகின்றன என்றார்.
ஒவ்வொரு மாநிலத்தின் அரசியல் நிலைமைக்கு ஏற்ப குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பாஜக மாறுபட்ட நிலைப்பாட்டைஎடுத்து வருகிறது. கேரளா வந்த அமித்ஷா, சட்டம் அமல்படுத்தப் படும் என்றார். இதுபோல் வங்கத்திலும் செயல்படுத்தப்படும் என்றுபிரச்சாரம் செய்யப்படுகிறது. அதே நேரத்தில், இது அசாமில் செயல்படுத்தப்படாது என்று பாஜக-வால் அறிவிக்கப்பட்டது. பாஜகவின் கண் வாக்கு மீது உள்ளது. மதப் பிளவுகளை உருவாக்குவதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறுவதே பாஜக-வின் குறிக்கோள். ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் ஒரு புதிய சட்டத்தை உருவாக்குகிறது. ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் சிறுபான்மையினரைத் தாக்குகிறது.
நாட்டின் தன்னிறைவு என்பதற்கு பதிலாக “தானும் ரிலையன்ஸூம்” என்பதே மோடியின் கொள்கையாக உள்ளது. இந்தியாவின் செல்வங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நண்பர்களுக்கு விற்கப்படுகின்றன. தில்லி போராட்டத்திற்கு தலைமை தாங்கும்லட்சக்கணக்கான விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்கத் தயாராக இல்லை. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு மாற்றை அமல்படுத்தும் ஒரே அரசு கேரளா மட்டுமே. மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை திரிசூலத்தால் எதிர்கொள் கின்றனர். முதலாவது சூலம் பணம். அதை பயன்படுத்தி யார்வென்றாலும் அரசாங்கத்தை நாங்களே அமைப்போம் என்றுபாஜக கூறுகிறது. மற்ற இரண்டு சூலங்கள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை. ஆனால், கேரளாவில் இடதுசாரி அரசாங்கத்தை கவிழ்க்க இவை எதையும் பயன்படுத்த முடியாது என்று யெச்சூரி கூறினார்.