election2021

img

பாஜகவின் ஆள்பிடி வேலைகளால் அச்சம்... ஜெய்ப்பூர் அழைத்துச் செல்லப்படும் அசாம் காங்கிரஸ் வேட்பாளர்கள்....

கவுகாத்தி:
அசாம் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளநிலையில், ஆளும் பாஜக - அசாம் கணபரிஷத் கூட்டணியானது, தற்போதே பேரங்களைத் துவங்கி விட்டது. வெற்றிவாய்ப்புள்ளவர்கள் என்று கணிக்கப்படும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை ரகசியமாக சந்தித்து, தேர்தலுக்கு முன்பே அவர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதனால் அச்சமடைந்துள்ள எதிர்க்கட்சிகள், தேர்தல் முடிவுகள் வெளிவரும்வரை, தங்களின் வேட்பாளர்களை அசாம் மாநிலத்திற்கு வெளியே அழைத்துச் சென்று, நேரடி பார்வையில் வைப்பதென்று முடிவுசெய்துள்ளன.அந்த வகையில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான அகில இந்தியஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியைச்சேர்ந்த பல வேட்பாளர்கள், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலம்ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட் டுள்ளனர்.“பாஜக, மத்தியில் ஆளும் வரையில், அந்தக் கட்சி, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது தொடரும்” என்றும், “அவர்களிடமிருந்து எம்எல்ஏ-க்களைப் பாதுகாப்பதைத் தவிரதங்களுக்கு வேறு வழியில்லை” என்றும்ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் மகேஷ் ஜோஷி பேட்டி ஒன்றில் தெரிவித் துள்ளார்.