election-2019

img

தத்துவங்களுக்கு இடையே போர்; மதச்சார்பற்ற அணியே வெல்லும்!

 சமூகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று நினைக்கிற முற்போக்கு தத்துவவாதிகளுக்கும் சமூகத்தை மாற்றவே கூடாது என்று நினைக்கிற பிற்போக்குவாதிகளுக்கும் இடையே 

நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் போரில் மதச்சார்பற்ற அணி வெல்லும் என்று உறுதிபடக் கூறுகிறார் ஆதித்தமிழர் கட்சி நிறுவனர்-தலைவர் கு.ஜக்கையன்.


நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைஇரண்டு தத்துவங்களுக்கு இடையே நடக்கும்யுத்தமாக பார்க்கிறேன். சமூகத்தை மாற்றியமைக்கவேண்டும் என்று நினைக்கிற தத்துவவாதிகளுக்கும்சமூகத்தை மாற்றமுடியாது, மாற்றவே கூடாது என்றுநினைக்கிற பிற்போக்குவாதிகளுக்கும் இடையே நடக்கும்போராகவும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான இரண்டாவது சுதந்திரப் போராட்டமாகவும் பார்க்கிறேன். இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் தன்மையிலிருந்து தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் தன்மை முற்றிலும் மாறுபட்டது. நாட்டின் அடிப்படையாக இருக்கின்ற மதச்சார்பின்மைக் கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது.மத்தியபாஜக அரசு இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்றுவதற்கான முதல்கட்ட பரீட்சார்த்த நடவடிக்கைதான் கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சி. தமிழகத்தில் அதிமுகவின் இயலாமையால் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. பாமக-பாஜக கூட்டணியைசாதிய, மதவாத கூட்டணியாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. மாட்டுத்தோலை உரித்ததற்காக, மாட்டுக்கறி வைத்திருந்ததற்காக தலித், பழங்குடி, முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் மக்களை தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக தாக்குதல் நடத்தப்படுகிறது. பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம்.மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்என்ற எண்ணம் பாஜகவிற்கு இல்லை. கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் ஆட்சிக்கு வந்தபின்னர் நிறைவேற்றவில்லை. இதனை உணர்ந்த மக்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு தக்க பாடம் புகட்ட காத்திருக்கிறார்கள். 


பாஜகவின் கிளையாக அதிமுக


அதிமுகவை அழிப்பதற்காகத்தான் பாஜக அதனுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு பாஜகவின் கிளைக்கட்சியாக அதிமுக மாறிவிடும். பாஜகவளர்வது தமிழக மக்களுக்கு ஆபத்தானது. பாஜகவுடன்கூட்டணியை அதிமுக தொண்டர்களே ஏற்றுக்கொள்ளவில்லை.முஸ்லிம் மக்கள் மீது வெறுப்பை வளர்த்து, வன்முறையை தூண்டுவதும் அதன் மூலம் அரசியல் செல்வாக்கை அதிகரித்து ஆட்சியைப் பிடிப்பதும்தான் பாஜகவின் நடைமுறையாக இருந்து வந்துள்ளது. பாமகவும் இதே நடைமுறையைத்தான் பின்பற்றுகிறது. சாதிரீதியான அணிதிரட்டல் தோல்வியைத் தழுவும். இவர்களை வீழ்த்துவதற்காகத்தான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.


தூய்மை இந்தியா ஒரு ஏமாற்று


தூய்மை இந்தியா திட்டம் என்பது மக்களை ஏமாற்றுகிற வேலை. இதுவரை இந்தியா அசுத்தமாக இருந்தது போன்றும், பாஜகவினர் வந்துதான் சுத்தப்படுத்துவது போன்றும் அதன் தலைவர்கள் போட்டோவிற்கு போஸ்கொடுக்கிறார்கள். ஆனால் நாடு முழுவதும் தினந்தோறும் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளும் துப்புரவுத்தொழிலாளர்களின் உழைப்பை மதிப்பதில்லை. இவர்களுக்கு மாற்றுத்தொழிலை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. துப்புரவுத்தொழிலாளர்களின் வாழ்க்கைநிலைமைகள் பற்றி ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் யோசிக்கக்கூட இல்லை. 


மகத்தான மார்க்சிய இயக்கம்


ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயிவிஜயன் தலைமையிலான கேரள அரசு,மனிதக் கழிவுகளை அள்ளுவதற்கு இயந்திரத்தை அறிமுகப்படுத்தி, அதைத்தான் பயன்படுத்துகிறது. இந்தியாவிற்கே முன்மாதிரியாக இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. தமிழகத்தில் அருந்ததியர்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுக் கொடுத்ததில் மிகப்பெரிய பங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளது. கலைஞர் ஆட்சிக்காலத்தில் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் இதற்கான முன்முயற்சியை எடுத்தார்.இன்றைக்கு பிரதமர் மோடி புண்ணியம் தேடுவதற்காக கங்கை நதியில் துப்புரவுத்தொழிலாளர்களின் கால்களை கழுவிவிட்டு,தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பது போல் நாடகம் நடத்துகிறார். மோடியின் நடவடிக்கை மிகப்பிற்போக்குத்தனமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின்வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் மோடி அரசு செயல்படுத்தவில்லை. சாதியமைப்பை தக்கவைக்கக்கூடிய கூட்டணியாகத்தான் அதிமுக-பாஜக கூட்டணி உள்ளது.


கமலும் சீமானும் யாருக்காக நிற்கிறார்கள்!


தன்னை முற்போக்குவாதி,பகுத்தறிவுவாதியாக காட்டிக்கொள்ளக்கூடிய கமல்ஹாசன் பாஜகவின் ஆளாக உள்ளார். நாம் தமிழர் கட்சி சீமானின் இனத்‘தூய்மைவாதம்’ விஞ்ஞானத்திற்கு புறம்பானது. அவரது கட்சிக்கு எந்தவொரு தத்துவார்த்த பின்புலமும் இல்லை. தீண்டாமைக்கு எதிராக ஒரு போராட்டமாவது நடத்தினாரா? இல்லை. பாஜகவிற்கு எதிரான ஓட்டுக்களை பிரிக்கும் வேலையை கமல்ஹசானும் சீமானும் செய்கின்றனர். மக்கள் மத்தியில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. பிரச்சாரத்தில் மக்களிடம் இது வெளிப்படுகிறது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. புதிய வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு உள்ளது. இவர்கள் மதச்சார்பற்ற அணிக்கு வாக்களிக்க வேண்டும்.இதற்கான பிரச்சாரத்தை அவர்கள் மத்தியில் மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் அடுத்ததலைமுறையை நிர்ணயிக்கக்கூடியது இந்த நாடாளுமன்றத் தேர்தல். இதுவரை தேர்தல் புறக்கணிப்பு செய்த அமைப்புகள் கூட ,பாஜகவிற்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக ஆதித்தமிழர் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து பணியாற்றிவருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேசிய அளவில்பாதுகாப்பான ,ஆதரவான கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பார்க்கிறோம். தத்துவார்த்தப் போராகநடைபெறக்கூடிய இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்லும்.



சந்திப்பு : எஸ்.உத்தண்ட்ராஜ், பா.ரணதிவே