election-2019

img

மார்ச் மாதத்தில் அதிகரித்த வேலையில்லாத் திண்டாட்டம்

புதுதில்லி:
கொரோனா பொதுமுடக்கத்தையொட்டி, இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் பன்மடங்கு அதிகரித்து இருப்பதாக இந்தியாவிற்கான பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy Pvt. Ltd.- CMIE) அண்மையில் அறிக்கை அளித்திருந்தது.

“இந்தியாவின் ஒட்டுமொத்த வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த மே 3-ஆம்தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 27.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தனித்தனியாகப் பார்த்தால், நகர்ப்புறங்களில் 25.6 சதவிகிதமாகவும், கிராமப்புறங்களில் 22.6 சதவிகிதமாகவும் வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது” என்று சிஎம்ஐஇகூறியிருந்தது.இது ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்திற்குமான கணக்கு என்றால், அமைப்புசார்ந்த ஊழியர்களின் வேலையிழப்பு குறித்த தகவல்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EmployeeProvident Fund Organization - EPFO) அறிக்கைகள் மூலமே கணக்கிடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் புதிதாக சேரும் பி.எப். வாடிக்கையாளர்களின் மாத நிகர சேர்த்தல் எண்ணிக்கை (Monthly Net addition) அடிப்படையில் இபிஎப்ஓ அமைப்பு இந்த கணக்கை அளித்து வருகிறது.

அந்த வகையில், 2020 மார்ச் மாதத்தில்புதிதாக பி.எப். திட்டத்தில் சேருவோரின் எண்ணிக்கை, அதன் முந்தைய மாதங்களைக் காட்டிலும் சரிபாதியாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.கடந்த செப்டம்பர் 2017 முதல் மார்ச்2018 வரையான மாதங்களில் சராசரியாக2 லட்சத்து 21 ஆயிரம் வாடிக்கையாளர் கள் பி.எப். திட்டங்களில் சேர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அதே போல 2018 -19 நிதியாண்டில் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 5 லட்சத்து 10 ஆயிரம் பேர் சேர்ந்ததாகவும், 2019 - 20 நிதியாண்டில்கூட மாதந்
தோறும் சராசரியாக 6 லட்சத்து 54 ஆயிரம்பேர் பி.எப். திட்டத்தில் சேர்ந்தார்கள் என்றுஇபிஎப் அலுவலகம் கணக்கு காட்டுகிறது.2020 ஜனவரியில் 9 லட்சத்து 99 ஆயிரம் பேர், பிப்ரவரியில் 10 லட்சத்து 20 ஆயிரம் பேர் என்று இந்த எண்ணிக்கை இருந்துள்ளது. ஆனால், இந்தியாவில் கொரோனா தாக்கம் அறியப்பட்ட மார்ச் 2020-இல் 5 லட்சத்து 73 ஆயிரம் பேர்தான் பி.எப். திட்டத்தில் புதிதாக சேர்ந்து இருக்கின்றனர்.இபிஎப் திட்டத்தில் புதிதாக சேர்ந்தவர்கள் + மீண்டும் பி.எப். பணம் செலுத்தியவர்கள் ஆகியோரிலிருந்து, வேலையிழப்பு காரணமாக பி.எப். பணம் செலுத்துவதை நிறுத்தியவர்களைக் கழிப்பதன்மூலம் வரக்கூடிய எண்ணிக்கையைத் தான், ஒரு மாதத்தில் புதிதாக இபிஎப்திட்டத்தில் சேர்ந்தவர்கள் (Monthly Net addition) என்று இபிஎப்ஓ கணக்கிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.