ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று நிறைவடைகிறது
வருகின்ற நவம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்க தேவையான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
தேர்வர்கள் trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.