சென்னை,டிசம்பர்.10- குரூப் 4 தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் சான்றிதழ்களை முறையாகப் பதிவேற்றம் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சிலரது சான்றிதழ்கள் குறைபாடாகவும், சரியாகப் பதிவேற்றம் செய்யப்படாமலும் உள்ளது. சரியான சான்றிதழ்களை வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி இரவு 11.59 மணிக்குள் பதிவேற்றம் செய்துவிட வேண்டும், இதுதான் இறுதியான வாய்ப்பு என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.