education

img

யுஜிசி அறிவிப்பை கண்டித்து SFI ஆர்ப்பாட்டம்!

சென்னை,ஜனவரி.07- பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கியதை கண்டித்து இந்தியர் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை, வேந்தரான ஆளுநரே அமைப்பார் என பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள புதிய வரைவு விதிகளில் கூறப்பட்டுள்ளது. இதன்படி,     3 பேர் கொண்ட தேடுதல் குழுவில் இனி மாநில அரசின் உறுப்பினர் இடம்பெற முடியாது. ஆளுநர், யுஜிசி, பல்கலை., நிர்வாக குழு ஆகியோர் தலா ஒரு உறுப்பினரை தேடுதல் குழுவுக்கு பரிந்துரைப்பார்கள். மாநில உரிமையை பறிக்கும் இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி இன்று (ஜன.7) சென்னை பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் யுஜிசி அறிவிப்பை எரித்து மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.மிருதுளா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தமிழ் உள்ளிட்டோர் பேசினர்.