சென்னை,டிசம்பர்.24- SET தேர்வி இனி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
UGC மூலம் நடத்தப்பட்டு வந்த மாநில தகுதி தேர்வு (SET) இனி ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) மூலம் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
SET தேர்வு நடத்த போதுமான நிர்வாக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருப்பதால் பல்கலைக்கழக பேராசிரியர்களின் பங்களிப்புடன் தேர்வு நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்