வங்கி கணக்குகளை குறிவைக்கும் டாக்சிக் பாண்டா மால்வேர்!
ஆண்ட்ராய்டு போன்கள் மூலம் பயனர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருட உதவும் டாக்சிக் பாண்டா (ToxicPanda) என்ற புதிய மால்வேர் குறித்து சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித் துள்ளனர். பொதுவாக அதிகாரப்பூர்வமற்ற இணைய தளங்களில் இருந்து மென்பொருள்கள் பதிவிறக்கம் செய்யும் போது, இது போன்ற பேங்கிங் ட்ரோஜன் (Banking Trojan) பரவுகிறது. தென்கிழக்கு ஆசிய பயனர் களை குறிவைத்து வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட டிஜி-டாக்சிக் (Digi-Toxic) என்ற மால்வேரு டன் இந்த டாக்சிக் பாண்டா மால்வேர் தொடர்புடையதாக சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித் துள்ளனர். பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள 16 வங்கிகளும், சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு பயனர்களும் இந்த மால்வேரால் தாக்கப்பட்டுள்ளனர் என்று சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கிளியாஃபிளை இண்டலி ஜென்ஸ் (Cleafly Intelligence) தெரிவித்துள்ளது.
நோட்பேட் செயலியில் புதிய ஏஐ அம்சம்!
மைக்ரோசாப்ட் நிறுவ னம், விண்டோ ஸில் உள்ள நோட்பேட் (Notepad) செயலியில் ரீரைட் (Rewrite) செய் யும் செயற்கை நுண்ணறிவு திறனை ஒருங்கிணைத்துள்ளது. இந்த ரீரைட் அம்சம் மூலம் பய னர்கள், நோட்பேடில் குறிப்பிட்டுள்ள வாக்கியங்களை மறுவடிவமைக்க வும், தொனியை சரிசெய்யவும் மற்றும் உள்ளடக்கத்தின் நீளத்தை மாற்றவும் அனுமதிக்கிறது. நோட்பேடில் புதிய ரீரைட் ஏஐ அம்சத்தை பயன்படுத்த, நீங்கள் திருத்த விரும்பும் உரையை ஹைலைட் (Highlight) செய்து, அதனை ரைட் கிளிக் (Right Click) செய்தாலோ அல்லது Ctrl+I என்ற Key board Shortcut-ஐ பயன்படுத்தி ரீரைட் ஆப்ஷனை தேர்வு செய்யலாம். அமெரிக்கா, பிரான்ஸ், இங்கி லாந்து, கனடா, இத்தாலி, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் Windows 11 பயன்படுத்தும் பயனர் களுக்கு முன்னோட்ட வடிவில் இந்த அம்சம் தற்போது வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த அம்சம் இந்தியாவுக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் ப்ரோகிராம் கோட்களை எழுதும் ஏஐ!
கூகுளின் 25 சதவிகித ப்ரோகிராம் கோட்கள் (Program Codes) செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு வருவாய் தொடர்பான கூட்டத்தில் பேசிய அதன் சிஇஒ சுந்தர் பிச்சை, கூகுளின் ப்ரோகிராம் கோட்களில் (Program Codes) 25 சதவிகிதத்திற்கும் அதிகமானவை, செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மென்பொறியாளர்கள் மறுஆய்வு செய்து, பிழை திருத்தங்களை மேற்கொள்வதாகவும் தெரி வித்துள்ளார். இதன் மூலம், பொறியாளர்கள் வேறு சிக்க லான பணிகளில் கவனம் செலுத்தலாம் எனவும், இது மென்பொருள் வடிவமைப்பு சார்ந்த பணியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித் துள்ளார்.