districts

img

சென்னையில் நவ. 21 முதல் 24 வரை புரோ பீச் வாலிபால் போட்டி

சென்னை, நவ.8-  புரோ பீச்  வாலிபால் போட்டி 2024 சென்னையில் நவம்பர் 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை கிழக்கு கடற்கரை சாலையில் வட நெமிலியில் நடைபெறவுள்ளது.  சர்வதேச வாலிபர் சம்மேளனம் (எஃப்ஐவிபி) மற்றும் வாலிபால் வேர்ல்ட் அமைப்பு ஆகியவற்றால் இந்த போட்டியை நடத்தும் பொறுப்பு மெரினா பீச் ஸ்போர்ட்ஸ் கிளப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  உலகின் தலைசிறந்த கடற்கரை கைப்பந்து விளையாட்டு வீரர்கள் உலகளவில் 18 கட்டங்களில் கணிசமான பரிசுத் தொகைக்காக போட்டி யிடுகின்றனர். இந்தப்போட்டியில் 42 நாடுகளைச் சேர்ந்த 24 ஆண்கள் மற்றும் 24 பெண்கள் அணிகள் பங்கேற் கின்றன.  போட்டிகள் வாலிபால் உலகத் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு, உலகளாவிய பார்வையாளர் களை சென்றடையும். இந்தியாவின் முதன்மையான டிஜிட்டல் ஸ்போர்ட்ஸ் பிளாட்ஃபார்ம் “FANCODE” செயலி இந்த போட்டிகளை ஸ்ட்ரீம் செய்யும்.  அதே நேரத்தில் EUROSPORT தினமும் நேரடி ஒளிபரப்பை வழங்கும். போட்டி கள் காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை நான்கு  மைதானங்களில் மின்னொளியில் நடைபெறும் என்று மெரினா பீச் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாக குழு உறுப்பி னர்கள் வாசுதேவன், இர்பான், மகேந்திரன் ஆகியோர் தெரி வித்தனர். பேட்டியின்போது நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மார்ட்டின் சுதாகர், சுந்தர், மோகன்ராஜ் ஆகியோர் உடனி ருந்தனர்.