வேலூர். நவ. 8 - வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளில் பெண்கள் பிரிவில் சேலம் அணியும், ஆண்கள் பிரிவில் சென்னை அணியும் வெற்றி பெற்றன. இதன் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை விஐடி வேந்தர் டாக்டர்.கோ.விசுவநாதன் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், விளை யாட்டில் சிலவற்றை மாணவர்கள் விரும்பி விளையாடுவர் அவற்றில் ஒன்றுதான் கைப்பந்து. நான் மாணவனாக இருக்கும் போது கைப்பந்து விளையாடுவேன். எனக்கு எப்போதும் கைப்பந்து மீது ஒரு ஈர்ப்பு உண்டு. நீங்கள் மாணவ பருவம் முடித்தபின்பும் விளையாடுவதை தொடர வேண்டும். மேலும் விளையாட்டில் கலந்துகொள்வதே ஒரு வெற்றிதான் என்று பேசினார். விழாவில் விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், வேலூர் மாவட்ட கைப்பந்து அமைப்பின் தலைவர் டாக்டர்.என்.வி.தியாகசந்தன், துணைத்தலைவர் வி.வினோத் குமார், செயலாளர் கே.டி.லக்ஷ்மணன், பொருளாளர் டி.தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.