economics

img

தமிழ்நாட்டுற்கு ரூ.7,268 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு!

வரி வருவாயில் மாநிலங்களுக்கான நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை ஒன்றிய அரசு விடுவித்தது. அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய தொகையுடன் கூடுதல் தவணையாக ரூ.89,086 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.
அதிகபட்சமாக, உத்திரப்பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடியும், பீகார் மாநிலத்திற்கு ரூ.17,921 கோடியும், மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.13,987 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ.13,404 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
தென் மாநிலங்களை பொறுத்தவரையில், தமிழகத்திற்கு ரூ.7,268 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.7,211 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.6,498 கோடியும், கேரளாவிற்கு ரூ.3,430 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.