economics

img

நாளை UPI சேவைகள் செயல்படாது என HDFC வங்கி அறிவிப்பு!

பராமரிப்பு பணிகளுக்காக நவம்பர் மாதத்தில் இரண்டு நாட்களுக்கு UPI சேவைகள் நிறுத்தப்படுவதாக HDFC வங்கி தெரிவித்துள்ளது.

HDFC வங்கி, அதன் டிஜிட்டல் வங்கி சேவையின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த நவம்பர் 2024இல் UPI சேவைகளுக்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த காலத்தில் சில UPI செயல்பாடுகள், பரிவர்த்தனைகள் உட்பட, அனைத்து தளங்களிலும் வங்கி சார்ந்த பணிகள் செயலிழக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து HDFC வங்கி தனது UPI பராமரிப்பு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

“HDFC வங்கி தனது வங்கி சேவைகளை மேம்படுத்துவதற்காக கீழ்க்கண்ட தேதிகளில் முக்கியமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது:

  1. நவம்பர் 5, 2024 - காலை 12:00 முதல் 2:00 மணி வரை (2 மணி நேரம்).
  2. நவம்பர் 23, 2024 - காலை 12:00 முதல் 3:00 மணி வரை (3 மணி நேரம்).

இந்த பராமரிப்பு காலத்தில், கீழ்க்கண்ட UPI சேவைகள் தற்காலிகமாக முடக்கப்படும்:

  1. HDFC வங்கியில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் UPI பரிவர்த்தனைகள் மற்றும் RuPay கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கான பரிவர்த்தனைகள்
  2. HDFC MobileBanking, Gpay, WhatsApp Pay, Paytm, Shriram Finance, Mobikwik, மற்றும் Kredit.Pe ஆகியவற்றில் HDFC வங்கி UPI பயனர்களின் UPI பரிவர்த்தனைகள்.

HDFC வங்கி மூலம் சேர்க்கப்பட்ட அனைத்து வணிகர்களுக்கும் இந்த பராமரிப்பு காலத்தில் UPI பரிவர்த்தனைகள் கிடைக்காது. எங்கள் சேவைகளின் செயல்திறனை மேம்படுத்த எங்களது முயற்சிக்கு உங்கள் புரிதலும் ஒத்துழைப்பும் நன்றியுடன் வரவேற்கிறோம்,” என்று வங்கி அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கூறியுள்ளது.