districts

img

நிகழ்காலத்தையும் எழுதுங்கள்!

புதுச்சேரி, நவ. 8- புதுச்சேரியில் நவம்பர் 7 புரட்சி நாளில் செம்மலர்  புதுச்சேரி சிறப் பிதழ் வெளியீட்டு விழா வெள்ளிக் கிழமை (நவ.8) நடைபெற்றது. செம்மலர் புதுச்சேரி சிறப்பிதழை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பி னர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுத் தனது உரையில்,” புதுச்சேரி சிறப்பி தழ் காலனியாதிக்க காலத்திலி ருந்து தற்போது வரை உள்ள செய்தி களைச் சொல்லும் ‘என்சைக்ளோ பீடியா’ வாகத் இந்த சிறப்பிதழ் திகழ்கிறது. பிரஞ்சு இந்திய விடு தலைப் போராட்டத்தின் வீரஞ்  செறிந்த வரலாற்றை இச்சிறப்பிதழ் பதிவு செய்திருக்கிறது என்றார்.     செம்மலர் சிறப்பிதழின் உள்ளடக் கத்தை உருவாக்கிய ஆசிரியர் குழு விற்கும், தயாரித்த குழுவிற்கும் பாராட்டுத் தெரிவித்தார். இவ்வித ழில் வரலாற்று அறிஞர்  ஜெயசீல ஸ்டீபனின் நேர்காணல் அரிய தகவல்களையும், அவரது வியக்கத் தக்க ஆய்வு முறைகளையும் பதிவு செய்திருக்கிறது. மாற்று கருத்துக்கள் இருந்தாலும் அவரது ஆய்வுகள், மார்க்சீய கண்ணோட் டத்தின் அடிப்படையிலேயே  அமைந்திருப்பதாக குறிப்பிட்டார்  புதுச்சேரியில் இயங்கி வரும் ரோமன் ரோலண்ட் நூலகம் இந்தியா விலேயே முதன் முதலில் தொடங்கப் பட்ட திருவனந்தபுரம் நூலகத்திற்கு அடுத்ததாக -சென்னையில் இயங்கி வரும் கன்னிமாரா நூலகத்திற்கு முன்னதாகவே- தொடங்கப்பட்ட தகவலை பகிர்ந்து கொண்டார். பாரதி, பாரதிதாசன், சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடங்கள் குறித்து இவ்விதழில்  புதிய தகவல்கள் இருக்கின்றன. முனைவர் நா. இளங்கோவின்  கட்டுரையில் குறிப்பிடுவதைப் போல்  கம்பதாசனின், திரை இசைப் பாடல்கள்  சோசலிச கருத்துக் களைப் பிரதிபலிக்கின்றன என்பதை யும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலி ருந்து வந்ததால் அவர் புறக்கணிக் கப்பட்டதையும் கவனத்தில் கொள்ள  வேண்டும். புதுச்சேரி சிறப்பிதழில் படைப்புகளை தந்த எழுத்தாளர்கள் கடந்த காலத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள். நிகழ்காலத் தையும் தங்களது படைப்புகளில்  பதிவு செய்யவேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். 

தமிழில் எழுத செம்மலரே காரணம் 

இந்நிகழ்வில் பங்கேற்ற வரலாற் றாய்வாளர் ஜெயசீல ஸ்டீபன்,” தனது உரையில்   எனது பெரும்பா லான ஆய்வுகள் ஒடுக்கப்பட்ட உழை ப்பாளிகள் மற்றும்  புலம்பெயர் மக்கள் குறித்தே இருக்கும். இவர்கள் குறித்து வெளிஉலகம் அறிய வேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலத் திலேயே எழுதி வந்தேன். ஐரோப் பிய மொழிகளிலும், சீன மொழியி லும்  எனது நூல்கள்  மொழிபெயர்க்க ப்பக்கப்பட்டுள்ளன. . 13 ஆண்டு களுக்கு முன்பு பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் எனது ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகள் குறித்து, இரண்டு மாதங்கள் , தொடர்ந்து  செம்மலர் இதழில் எழுதியிருந்தார். அப்போதுதான் எனக்கு அறிமுக மானது செம்மலர். நான் வாழக்கூடிய இந்த மண்ணின் தமிழ் மக்களும் எனது படைப்புகளை அறிய வேண்டும் என்ற சிந்தனை அவ்விதழ்  மூலம் எனக்கு வந்தது. நான் தமிழில் எழுதுவதற்கான காரணம் செம்ம லர் இதழ் தான் என்றார்.  புதுச்சேரியின் முகமாக செம்மலர்  ஆட்சியாளர்களின் கொள்கை களால், புதுச்சேரியின் முகம் தற்போது தவறான முகமாகச்  சித்தரி க்கப்படுகிறது. புதுச்சேரியின் உண்மையான முகத்தை இப்போ தைய காலச்சூழலில் செம்ம லரின் நவம்பர் இதழ் பறைசாற்றி யிருக்கிறது. வரக்கூடிய ஆண்டுக ளிலும் தொடர்ந்து புதுச்சேரி சிறப்பிதழ் வருவதற்கு செம்மலர் ஆசிரியர் குழு முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டு கோள் விடுத்தார்.  நிகழ்வில் பேசிய முனைவர் உமா அமலோற்பவ மேரி தனது உரை யில், “மக்கள் மத்தியில் வாசிப்புப்  பழக்கம் குறைந்து வரும் சூழலில், செம்மலர் இதழ் அதன் அவசியத்தை வலியுறுத்தும் விதத்திலும் வாசிப்புத் தேவையை அடுத்து தலை முறைக்கு உணர்த்தும் விதத்திலும் பணியாற்றுகிறது “ என்றார்.  ‘‘பாவலர் சண்முகசுந்தரம் தனது  உரையில்,” நூல் அறிமுகம் வெளியீடு போன்றவைகளுக்கு  பார்வையாளர்கள் வருகை குறைந்து கொண்டே போகும் சூழலில், முற்போக்கான நூல்கள் குறித்த கூட்டம்  அரங்கு நிறைந்த நிகழ்வாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது  என்றார்.   நிறைவாக புதுச்சேரி சிறப்பி தழுக்குப்  பங்களிப்புச்  செய்த படைப் பாளிகளைப்  பாராட்டிப்  பேசிய செம்மலர்  ஆசிரியர் ச தமிழ்ச் செல்வன்,  தனது உரையில் 1970 இல் கு.சின்னப்ப பாரதியின் முன் முயற்சியில் தொடங்கிய செம்மலர், இன்றைய நாள் வரை தனக்கென வரித்துக் கொண்ட கொள்கையில் வழுவாமல் பணியாற்றி இருக்கி றது .செம்மலர் எண்ணற்ற எழுத்தாள ர்களின் ஏணியாக இருந்திருக் கிறது. தங்கள் முதல் படைப்பை செம்மலரிலேயே பல எழுத்தாளர் கள் எழுதியிருக்கிறார்கள்.  பின்னா ளில் பல விருதுகள் பெற்று புகழ் பெற்ற எழுத்தாளர்களாக ஆகியி ருக்கிறார்கள்.   புதுச்சேரி சிறப்பிதழ் முயற்சி நல்லதொரு தொடக்கம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் புதுச்சேரி சிறப்பிதழ் வெளி வர வேண்டும் என்கிற  வேண்டு கோளை செம்மலர் ஆசிரியர் குழு பரிசீலிக்கும் என்றார்.,  இந்நிகழ்விற்கு அ.செல்வம் தலைமை ஏற்க, கு.பச்சையம்மாள் வரவேற்புரையாற்றினார்.முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் உமா அமர்நாத், மணி. கலியமூர்த்தி, கு. நிலவழகன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்வில் இருநூறு செம்மலர்  ஆண்டு சந்தா தொகையை தமுஎகச செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் வழங்கினார். இம்மலருக்குப் பங்களிப்புச் செய்த 25 படைப்பாளிகள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.