சென்னை, நவ. 8- சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனீகல்ஸ் மருத்துவ மனை, கடந்த 18 மாதங்களில் 200க் கும் மேற்பட்ட பெண்களுக்கு ரோபோட்டிக் மூலம் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது. ரோபோட்டிக் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகள் விரைவாக குணமடைவதால் அவர்கள் மருத்துவமனையில் இருந்து 16 முதல் 18 மணி நேரத் திற்குள் டிஸ்சார்ஜ் செய்யப்பட் டனர். மேலும் இந்த அறுவை சிகிச்சை மிகவும் பாதுகாப்பனது. பெண்களுக் கான இந்த அறுவை சிகிச்சையானது கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என்று இந்த அறுவை சிகிச்சை களுக்கு தலைமை தாங்கிய மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் துறையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பத்மப்ரியா விவேக் கூறினார். இது குறித்து கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் சென்னையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் நாகேஸ்வர் ராவ் கூறுகையில், ரோபோட்டிக் மகப்பேறு அறுவை சிகிச்சை என்பது நோயாளிகள் உடல்ரீதியாக அதிகம் பாதிக்காமல், அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களிலேயே வீட்டிற்கு செல்லும் வகையில் உள்ளது என்றார்.