districts

சென்னை முக்கிய செய்திகள்

அரசு பொது மருத்துவமனையில்  சிறப்பு காய்ச்சல் வார்டு

சென்னை,நவ.8-  பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் சிறப்பு காய்ச்சல் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வட கிழக்கு பருவமழையையொட்டி காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவ மனைக்கு வருவோர் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. மேலும், ஃ ப்ளூ’ வைரஸ்க ளால் பரவும், இன்ப்ளூயன்ஸா காய்ச்சல், டெங்கு, நுரையீரல் தொற்று பரவல் அதி கரித்துள்ளது. பெரும்பாலானோர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றாலும், டிசம்பர் மாதம் வரை காய்ச்சல் பாதிப்பு இருக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால், காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்ப, சிறப்பு வார்டுகள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு நேற்று திறந்து வைக்கப் பட்டது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணிராஜன் கூறுகை யில், ‘டெங்கு, இன்ப்ளூயன்சா, வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகை யில், 50 படுக்கையுடன் கூடிய சிறப்பு வார்டு கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 24 மணி நேரமும், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது வரை 15 வார்டுகளில் நோயாளி கள் சிகிச்சை பெறுகின்றனர். தேவைக்கு ஏற்ப, படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும்’ என்றார்.

ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திருவள்ளூர்,நவ.8-  சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதி கள் அடங்கிய திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இம்மழையால், புழல்,  பூண்டி, சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதி களில் இருந்து மழைநீர் வந்து கொண்டி ருக்கிறது. வெள்ளியன்று (நவ.8) காலை நில வரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 381 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 130 கன அடி, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 100 கன அடி, சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 35 கன அடி என, வந்துகொண்டி ருக்கிறது. அதுமட்டுமல்லாது, பூண்டி ஏரிக்கு, விநாடிக்கு 170 கன அடி கிருஷ்ணா நீரும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 315 கன அடி நீர் பூண்டி ஏரியிலிருந்தும் வந்துகொண்டிருக்கிறது. இதனால், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2,415 மில்லியன் கன அடியாகவும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 1,706 மில்லியன் கன அடியாகவும் இருக்கிறது. அதேபோல், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 487 மில்லியன் கன அடியாகவும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 90 மில்லியன் கன அடியாகவும் உள்ளதாக நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு  அர்ஜுன் சம்பத் மகன் மிரட்டல்  பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம்

சென்னை, நவ. 8-  இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி கோவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்  போது நக்கீரன்  ஆசிரியர் கோபாலுக்கு மிரட்டல் விடுப்பு வகையில் பேசி உள்ள தற்கு சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் வ. மணிமாறன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் ஆர்.கோபால் அவர்க ளின் நாக்கை அறுப்போம் என்றும் தமிழ்நாட்டில் ஆட்சி மாறியவுடன் கையில் விலங்கிட்டு நாயை ஒன்று அவரை இழுத்துச் செல்வோம் என்றும் அநாகரிகமாக பேசி உள்ளார். பத்திரிகைகள் வெளியான செய்திகளில் மாறுபாடு இருந்தால் அவற்றை வெளிப்படுத்துவதற்கான வழி முறைகள் இருக்கும் போது இது போன்று அநாகரிகமாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமைக்கும் ஊடக சுதந்திரத்திற்கும் எதிரானது. இத்தகைய போக்கு முளை யிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் சங்கம் (எம்யுஜெ) கேட்டுக் கொண்டுள்ளது.

வரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்வு

 சென்னை, நவ.8- சென்னை கோயம்பேடு சந்தைக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 60 முதல் 65 லாரிகளில் வெங்காயம் கொண்டுவரப்படுகிறது. ஆனால் அந்த மாநிலங்க ளில் மழை மற்றும் விளைச்சல் பாதிப்பால் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. அந்த வகை யில் கோயம்பேடுசந்தைக்கு 30 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வந்துள்ளது. இதனால் வெங்காயம் மொத்த விற்பனையில் கிலோ விற்கு ரூ.60 முதல் ரூ.90 ஆக விலை உயர்ந்துள்ளது. இதே போல் தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெங்காயம் சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை அதிகரித்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் நாள் ஒன்றிற்கு 1300டன் வெங்காயம் தேவைப்படும் நிலையில் வெங்காயம் வரத்து குறைந்தால் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ரேசன் கார்டு குறைதீர் முகாம்

சென்னை, நவ.8-  சென்னையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரேசன் கார்டு குறைதீர் முகாம் சனிக்கிழமையன்று (நவ.9) நடைபெறும் என்று தமிழக அரசு அறி வித்துள்ளது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட  மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணை யாளர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

சிபிஎம் கிளை மாநாடுகள் 

வடசென்னை மாவட்டம் திருவொற்றியூர் - எண்ணூர் பகுதிக் குழுவிற்கு உட்பட்டு நடைபெற்ற கிளை மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட செயலாளர்கள் விவரம்
1ஆவது வட்ட கிளை         - ஏ.தியாகராஜன்
2ஆவது வட்டம்             - வி.விஜயா
அன்னை சிவகாமிநகர்         - முகவை கி.பெருமாள்
ஏஐஆர் நகர்              - எஸ்.ஜான்சன்
எர்ணீஸ்வரன் நகர்          - ஜி.ஆரோக்கியசாமி
திருவீதியம்மன் நகர்          - எஸ்.ராஜ்குமார்
பிருந்தாவன் நகர்          - டி.ஆறுமுகம்
ராமநாதபுரம்              - டி.குமார்
வி.பி. நகர் ‘ஏ’              - எம்.ராமன்
வி.பி. நகர் ‘பி’              - பி.ராமமூர்த்தி
சடையங்குப்பம்             - ஆர்.மலையப்பன்
பாரத் நகர்             - ஆர்.சிட்டிபாபு
விம்கோ நகர்              - எஸ்.நாகராஜன்
அம்பேத்கர் நகர்         - எஸ்.வேலு
ராஜா சண்முகம் நகர்         - எச்.சதீஷ்
சத்தியமூர்த்தி நகர்         - எஸ்.தங்கசாமி
கார்கில் நகர் ‘ஏ’          - எம்.முருகன்
கார்கில் நகர் ‘பி’             - செல்வம்
கான்கார்             - ஏ.அருமைராஜ்
8ஆவது வட்ட             - ஏ.ஜெயராமன்
9ஆவது வட்ட             - டி.ஆண்ட்ரூஸ்
10ஆவது வட்ட             - டி.சீனிவாசன்
11ஆவது வட்ட             - ஏ.இசக்கி நாகராஜ்
12ஆவது வட்ட             - ராஜேந்திரன்
13ஆவது வட்ட             - சுவாமிதாஸ்
14ஆவது வட்ட             - சி.எம்.நவராஜ்
அசோக் லேலண்ட் 
பவுண்ட்ரீஸ் டிவிஷன்         - எ.சிவசங்கரன்
அசோக் லேலண்ட்         - கே.சுரேஷ்
கார்போரண்டம்             - பி.விஜயகுமார்
கட்டுமானம் ‘ஏ’             - ஜி.ராமு
கட்டுமானம் ‘பி’             - ஆர்.குமரேசன்
கட்டுமானம் ‘சி’             - பி.ராமசாமி
மாநகராட்சி             - சி.யோபு
மாணவர்             - கே.அகல்யா
நேதாஜி நகர் பெண்கள்         - எஸ்.சரஸ்வதி
எர்ணீஸ்வரர் நகர் பெண்கள்     - என்.கிருபா
திருவீதியம்மன் நகர் பெண்கள்    - ஆர்.தனலட்சுமி
காமராஜர் நகர் பெண்கள்         - வி.தேவிபாலா
ராமநாதபுரம் பெண்கள்         - பி.அல்மேலு
வி.பி.நகர் பெண்கள்         - எஸ்.கவிதா
பாரதியார் நகர் பெண்கள்         - கே.கே.புஷ்பா
ஏஐஆர் நகர் பெண்கள்         - வி.இந்திரா
பாரத் நகர் ‘ஏ’ பெண்கள்         - சி.மகாலட்சுமி
பாரத் நகர் ‘பி’ பெண்கள்         - மோகனா
அம்பேத்கர் நகர் பெண்கள்        - ஆர்.காலிதா
ராஜா சண்முகம் நகர் பெண்கள்     - சுந்தரி
சரஸ்வதி நகர் பெண்கள்         - என்.விமலா
சத்தியமூர்த்தி நகர் பெண்கள் ‘ஏ’     - எல்.சரிதா
சத்தியமூர்த்தி நகர் பெண்கள் ‘பி’     - எஸ்,அஜிதா
8ஆவது வட்டம் பெண்கள்        - பி.சுமதி
9ஆவது வட்ட பெண்கள்         - பி.அங்கம்மா
10ஆவது வட்ட பெண்கள்         - எஸ்.பாக்கியம்
14ஆவது வட்ட பெண்கள்         - வி.அம்சா

செஞ்சியில் நவ.12ல் உயர்கல்வி கடன் முகாம் 

விழுப்புரம், நவ.8- செஞ்சியில் நவ.12 அன்று கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்திற்கான கல்விக் கடன் முகாம் வருகின்ற 12-ந் தேதி காலை 10 மணியளவில் செஞ்சி ஆலம்பூண்டியில் உள்ள ரங்கபூபதி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, கல்விக்கடன் வழங்கும் முகாம் தொடர்பாக தெரிவித்து அதில் கலந்துகொள்ள அறிவுறுத்தவேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஓய்வூதிய குறைகளை  தெரிவிக்க செல் எண் அறிவிப்பு

கிருஷ்ணகிரி ,நவ.8- கிருஷ்ணகிரி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் நலத் துறை சார்பாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர் முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு தொடங்கி வைத்தார். பின்னர் முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்த ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை 8807380165 என்ற கைபேசி வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம். அதற்கான தீர்வுகளுக்கும், ஓய்வூதியர்களின் குறைகள் குறித்த கேள்விகளுக்கும் இத்துறையின் அலுவலர்கள் பதில் தெரிவிப்பார்கள் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி,நவ.8- மாவட்டத்தில் பாசன வசதி உள்ள விவசாயிகளின் நிலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிட தீவன சோளம் மற்றும் வேலிமசால் விதை கள், கருவிகள் 100 விழுக்காடு மானி யத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி, ஆதார் அட்டை,பசுந்தீவனம் பயிரிடப்பட உள்ள நிலத்திற்கான சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகிய வற்றுடன் விண்ணப்பம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.