districts

‘வேங்கை வயல்’ சம்பவக் குற்றவாளிகளை கால தாமதமின்றி கைது செய்க! தமிழக டிஜிபிக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்

புதுக்கோட்டை, மே 23 - வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின  மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த குற்றவாளி களை, 17 மாதங்களாகியும் சிபிசிஐடி போலீ சார் கைது செய்யாத நிலையில், இனியும் கால தாமதம் ஏற்படாத வகையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சங்கர் ஜூவாலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

“புதுக்கோட்டை மாவட்டம், இறையூர், வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு, டிசம்பர் 26 அன்று பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப் பட்டதும், அந்நீரை பருகிய பட்டியலின மக்கள் கடுமையாக உடல்நலம் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தும் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளா கியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி களை கைது செய்திட வேண்டுமென தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் போராட்டங்களை மேற்கொண்டன. இச்சம் பவத்தை நீதிமன்றங்களும் கடுமையாக கண்டித்திருந்தன.

இவ்வழக்கு முதலில் குற்றப்பிரிவு போலீசாரால் விசாரிக்கப்பட்ட நிலையில், வழக்கின் முக்கியத்துவம் கருதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி போலீசார் பலகட்ட விசாரணை யை மேற்கொண்டதுடன் சந்தேகப்பட்டவர் களது மரபணு சோதனை, குரல் மாதிரி சோத னைகளை மேற்கொண்டனர். இருப்பினும், சம்பவம் நடந்து 17 மாதங்கள் ஆகியும் இது வரை குற்றவாளிகள் கைது செய்யப்பட வில்லை. இதனால், பொதுமக்கள் மத்தியில் சிபிசிஐடி விசாரணை குறித்து பலவிதமான குழப்பங்களும், சந்தேகங்களும் ஏற் பட்டுள்ளன.

ஒரு சிறு கிராமத்தில் நடந்த இச்சம்பவத் தில் குற்றவாளிகளை 17 மாதங்களாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நம்பு வதற்கு கடினமாக உள்ளது. உண்மை யில், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வில்லையா அல்லது குற்றவாளிகள் அடை யாளம் காணப்பட்டும் கைது செய்வதற்கு காவல்துறை தயங்குகிறதா என்ற கேள்வி கள் எழுப்பப்படுகின்றன. இச்சம்பவத்தில் காவல்துறை காட்டிவரும் அளவுக்கதிகமான தாமதம் காவல்துறையின் மீதான நம்பகத் தன்மையை குறைப்பதாக உள்ளது என்பதை கவனப்படுத்துகிறோம்.

எனவே, வேங்கை வயல் சம்பவத்தில் இனியும் கால தாமதமின்றி குற்றவாளி களை விரைந்து கைது செய்ய துரித நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு கடிதத்தில் கே. பாலகிருஷ் ணன் குறிப்பிட்டுள்ளார்.

;