districts

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் மீது நடவடிக்கை ஏன்?

திருச்சிராப்பள்ளி, ஜூன் 15- திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல் மீது ஏன்  நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலா ண்மை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு கிராமத்தில் 4.70 ஏக்கரில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான பல  கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், எஸ்.ஆர்.எம் ஹோட்டல் நிறுவனத்திற்கு கடந்த 1994 ஆம் ஆண்டில் 30 ஆண்டு கால குத்தகைக்கு விடப்பட்டது. 

கடந்த 1994 ஜூன் 14 ஆம் தேதி குத்த கைக்கு விடப்பட்ட ஒப்பந்தம் 2024 ஜூன் 13 ஆம்  தேதியுடன் முடிவடைந்து விட்டது. 1994 ஆம்  ஆண்டு குத்தகை வழங்கப்பட்ட அரசாணைப் படி, அந்த நிலத்திற்கு சந்தை விலையின் அடிப் படையில், ஆண்டுக்கு ஏழு சதவீதம் குத்தகை தொகை கணக்கிட்டு 30 ஆண்டுகளுக்கு 47  கோடியே 93 லட்சத்து 85 ஆயிரத்து 941 ரூபாய் மாவட்ட ஆட்சியரால் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

ஆனால் குத்தகைதாரர் இதுவரை 9 கோடியே 8 லட்சத்து 20 ஆயிரத்து 104 ரூபாய்  மட்டுமே செலுத்தியுள்ளார். மீதமுள்ள 38 கோடியே 85 லட்சத்து 65 ஆயிரத்து 837 ரூபாயை இதுவரை செலுத்தவில்லை. பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் 30 ஆண்டுகளாக முழு மையான குத்தகைத் தொகையை செலுத்தா மல் எஸ்.ஆர்.எம். நிறுவனம் ஹோட்டலை தொடர்ந்து நடத்தி வந்துள்ளது. 

குத்தகை ஒப்பந்தப்படி 30 ஆண்டு காலத்திற்கு மட்டும் தான் குத்தகைக்கு விடப்படு கிறது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் குத்தகை காலத்தை  மேலும் நீட்டிக்க ஒப்பந்ததாரர் கூறக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குத்தகை முடி யும் நாளில் குத்தகைதாரர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு எவ்வித நிபந்தனையும் இன்றி நிலம் மற்றும் கட்டிடங்களை எந்த சேதா ரமும் இன்றி ஒப்படைக்க வேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்று கடந்த மே 2 ஆம் தேதி குத்த கைதாரருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட் டது. ஆனால் இதுவரை குத்தகைதாரர் நிலு வைத் தொகையை செலுத்தவில்லை. உண்மை நிலை இவ்வாறு இருக்க, சில ஊடகங் களில் எஸ்ஆர்எம் ஹோட்டல் சார்பாக தவ றான மற்றும் உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. 

குத்தகை காலம் முடிவடைந்ததாலும், குத்த கைதாரர் முறையாக முழுமையான குத்தகைத்  தொகையை செலுத்தாததாலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அரசாணை மற்றும் ஒப்பந்தத்தின்படி முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;