districts

குடியிருப்புகளுக்கு நடுவில் ஊர்வல விநாயகர் சிலைகள் தயாரிக்கும் கொட்டகைகள் அமைக்க எதிர்ப்பு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 15 - திருச்சி திருவானைக்காவல் மேலக் கொண்டை யம்பேட்டை பகுதி பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர்  பிரதீப் குமாரை சந்தித்து கொடுத்துள்ள மனுவில் கூறி யிருப்பதாவது:

மேலக் கொண்டையம்பேட்டை பகுதியில், ஊர்வல விநா யகர் சிலைகள் தயாரித்து விற்பனை செய்வதால், வெளியூர் களில் இருந்து ஊர்வல விநாயகர் சிலை வாங்க வரும் நபர்களால் எங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு இடையூறு  ஏற்படும் வகையில், வீடுகளின் மின் கம்பிகளை சேதப்படுத் துகிறார்கள். மேலும் வாகனங்களை சேதப்படுத்துகிறார்கள். வாகனங்கள் திருடு போகின்றன. 

உரிமையாளர்கள் தடை செய்யப்பட்ட மினுமினுப்பு துகள்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் குழந்தைகளுக் கும். முதியோர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதோடு மட்டு மின்றி, சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. ஊர்வலம் வரும்  வாகனங்கள் பூஜை பொருட்களான பூசணிக்காய், தேங்காய்,  எலுமிச்சை பழம் முதலியவற்றை வீதிகளிலேயே உடைப்ப தால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கும்  அபாயம் ஏற்படுகிறது. குடிநீர் குழாய்களை சேதப்படுத்து கின்றனர். 

விநாயகர் சிலை வாங்கிச் செல்லும் போது, பிற சமூ கத்தை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே பிற சமூக கொடி களை ஆட்டிக் கொண்டு, சாதிக் கலவரம் போன்ற பிரச்சனை களை ஏற்படுத்துகிறார்கள். இந்த சம்பவங்கள் குறித்து உரி மையாளர்களிடம் முறையிட்ட நிலையில், அவர்கள் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகையால், மேலக் கொண்டையம்பேட்டை பகுதியில் ஊர்வல சிலைகளை விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

;