districts

img

அரசுப் போக்குவரத்து தொழிற்சங்க அலுவலக கட்டிடம் நாகர்கோவிலில் அடிக்கல் நாட்டுவிழா

நாகர்கோவில், மே 23- தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க ( சிஐடியு) நாகர்கோவில் மண்டல அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் வியாழனன்று (மே 23) நடைபெற்றது. போக்கு வரத்து தொழிலாளர் சம்மேளன தலைவர் அ.சவுந்தரராசன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.   

தமிழ்நாட்டிலேயே போக்குவரத்து தொழி லாளர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் முதலாவது சங்கத்தை அமைத்தனர். மாவட்டத் தில் பதிவு செய்யப்பட்ட நான்காவது சங்கம்  இதுவாகும். கன்னியாகுமரி, நாகர்கோவில், ராணித்தோட்டம், குழித்துறை, மார்த்தாண்டம், திங்கள்நகர், குளச்சல் உட்பட  கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 பணி மனைகள் உள்ளன. 1966 இல் துவக்கப் பட்ட இச்சங்கம் 58 ஆண்டுகளாக தொழி லாளர்களின் உரிமைகளுக்கான போராட்டங் களை நடத்தி மாநில அளவில் வழிகாட்டி யாக விளங்கி வருகிறது. இச்சங்கத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக தொழி லாளர்கள் வழங்கிய நன்கொடையில் ராணித் தோட்டம் பணிமனை அருகில் நிலம் வாங்கப்பட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு இறு திக்குள் கட்டிடம் கட்டி முடிக்கும் திட்டத்து டன் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் கன்னியா குமரி மாவட்ட பொதுச் செயலாளர் சி.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன தலைவர் அ.சவுந்தரராசன், சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பி னர் க.கனகராஜ், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஆர்.செல்லசுவாமி, முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், சிபிஎம் போக்குவரத்து இடைக்குழு செயலாளர் சி.ஸ்டீபன் ஜெயக்குமார், சிஐடியு மாநில செயலாளர் எம்.ஐடாஹெலன், மாவட்டச் செயலாளர் கே.தங்கமோகனன், மாவட்டத் தலைவர் பி.சிங்காரன், ஓய்வுபெற்றோர் நல அமைப்பு பொதுச்செயலாளர் எம்.சுந்தர்ராஜ் ஆகியோர் பேசினர். 

சங்க மாவட்டத் தலைவர் டி.ஸ்டான்லி ராபர்ட், செயல் தலைவர் டி.சங்கரநாராயண பிள்ளை, பொருளாளர் பி.தோமஸ், துணை தலைவர் எப்.எஸ்.ஏ.லியோ, கட்டுமான தொழி லாளர் சங்க மாநிலத் தலைவர் கே.பி.பெரு மாள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சங்கத்தின் வரலாற்றை  தொகுக்க குழு அமைப்பு 
சங்கத்தின் வரலாற்றை தொகுக்க துணைத் தலைவர் எப்.எஸ்.ஏ.லியோ தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் முதலாவது ஆவணத்தை சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் வழங்கி துவக்கி வைத்தார். நிறைவுரை யாற்றிய சம்மேளன தலைவர் அ.சவுந்தர ராசன், மாநில அளவில் சங்கத்தின் வரலாறு தொகுக்கப்படும், அதற்கு கன்னியாகுமரி மாவட்ட வரலாறு தூண்டுகோலாக அமையும் என்றார். சங்க அலுவலகப் பணிகளுக்கு நன்கொடை வழங்கியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

;