districts

img

அகில இந்திய ஹாக்கி திருவிழா கோவில்பட்டியில் இன்று துவக்கம்

தூத்துக்குடி,மே 23- அகில இந்திய ஹாக்கி திருவிழா கோவில்பட்டியில் இன்று (மே 24) துவங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் கோவில்பட்டியில் நடைபெறும் அகில இந்திய ஹாக்கி போட்டி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்தியாவிலிருந்து பல் வேறு புகழ்பெற்ற ஹாக்கி அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கும்.  ஹாக்கி இந்தியா அனுமதியுடன் இந்த  போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கோவில்பட்டியில் உள்ள கே. ஆர்.கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெறும் லட்சுமி அம்பாள் சுழற் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டிகள் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் மே 24 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை  நடைபெறுகிறது.  இந்தப் போட்டியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் - அகமதாபாத், சென்ட்ரல் செக்ரிட்டேட் - புதுதில்லி, சவுத் சென்ட்ரல் ரயில்வே - செகந்திராபாத், என்.சி.ஓ.இ.  (நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸ லன்ஸ்) - போபால் மற்றும் எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் - கோவில்பட்டி உட்பட 16  அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.

நான்கு பிரிவு களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு பதிவிலும் முதல் இரண்டு இடங் களை பிடிக்கும் அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெரும். பின்னர் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளன. இந்த போட்டியில் பங்கேற்க  உள்ள  பல்வேறு அணிகளில் கோவில்பட்டி யை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

;