districts

img

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, மே 26- தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர்கள் சங்க சிறப்பு கோட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன், மாநில இணை செயலாளர்கள் சௌந்தர், தர்மராஜ், மாநில துணைத் தலைவர் கருப்பண்ண மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் பழனிச்சாமி துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் இளங்கோவன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில துணைத் தலைவர் மகேந்திரன் சிறப்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் பால்பாண்டி, மாநில துணைத்தலைவர் பெரியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக் காலமாக முறைப்படுத்த வேண்டும். சாலை பணியாளர்களில் தொழில்நுட்ப கல்வித் திறன் பெறாத ஊழியர்களுக்குரிய ஊதிய மாற்ற ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் முதுநிலை பட்டியலை தமிழ்நாடு சார்நிலை பணியமைப்பு சட்டம் அடிப்படையில் முறைப்படுத்தி வெளியிட அனைத்து கோட்ட பொறியாளர்களுக்கும் ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் நன்றி கூறினார்.

;