districts

திருச்சி முக்கிய செய்திகள்

பயணியர் நிழற்குடைகளை பழுது பார்க்க கோரிக்கை

பாபநாசம், ஜுன் 17 - பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில் பல பயணியர் நிழற்குடைகள் பழுதடைந்து, பயனற்ற நிலையில் இருப்பது குறித்தும், கரம்பத்தூரில் பயணியர் நிழற்குடையைச் சுற்றி செடிகள் வளர்ந்திருப்பது குறித்தும் தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது.  இதையடுத்து கரம்பத்தூர் பயணியர் நிழற்குடையில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டன.  இதேபோன்று கரம்பத்தூரில் பழுதடைந்த நிலையில் உள்ள நிழற்குடைகளை பழுது பார்ப்பதுடன், பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில் பழுதடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பயணியர் நிழற்குடைகளையும் பழுது பார்க்க வேண்டும். மக்கள் பயன்பாட்டில் இல்லாத பயணியர் நிழற்குடைகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பேருந்து நிறுத்தத்தில் மின் வாரிய அதிகாரியிடம் 9 பவுன் நகைகள் திருட்டு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 17- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி இரண்டாவது தெரு அக்ரகாரத்தைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (59).  இவர் தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில் மேற்பார்வை யாளராக  பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி, மகளுடன்  நகை எடுப்பதற்காக திருச்சி கடை வீதிக்கு வந்தார். திருச்சி கடைவீதியில் நகை வாங்கிவிட்டு, மூன்று பேரும் திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை பேருந்து நிறுத் தத்தில், தஞ்சாவூர் பேருந்து ஏறுவதற்காக நின்றனர். அப்போது அவரது கைப்பையை சோதித்துப் பார்த்த போது செயின், ஆரம் உள்பட 9 பவுன் தங்க நகை களை காணவில்லை. உடனே இதுகுறித்து ராமசுப்பிரமணி யன் அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்  பேரில் ஆய்வாளர் விஜயலட்சுமி வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகிறார்.

சிறுவர்களுக்கு போதை  மாத்திரை விற்றவர் கைது

திருச்சிராப்பள்ளி, ஜூன் 17 - திருச்சி பாலக்கரை பகுதியில் சிறுவர்கள் மற்றும்  இளைஞர்களுக்கு போதை மாத்திரைகள் விற்கப்படுவ தாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து உதவி  ஆய்வாளர் அலாவுதீன், தலைமைக் காவலர் கார்த்திக் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.  இந்நிலையில் குட்ஷெட் ரோடு கருமாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற மூன்று வாலிபர்களை  பிடிக்க முயன்றதில், இருவர் தப்பி ஓடிவிட்டனர். ஒரு வரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்க கூடிய போதை மாத்திரைகளை விற்றது தெரிய வந்தது.  விசாரணையில் அவர் முதலியார் சத்திரம் பகுதி யைச் சேர்ந்த சையது முஸ்தபா என தெரிந்தது. அவரிடம்  இருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  மேலும் தப்பி ஓடிய பிள்ளை மாநகரைச் சேர்ந்த அஜித்,  அல்லா பிச்சை ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து  திருச்சி வந்த 2 பேர் கைது 

திருச்சிராப்பள்ளி, ஜூன் 17- மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி  வந்தது. இதில் வரும் பயணிகள் திருச்சி சர்வதேச விமான  நிலையத்தில் ஐந்தாவது கவுண்டர் வழியாக வந்து கொண் டிருந்தனர். அப்போது முகேஷ் ராம் கௌதம் தலைமையி லான இமிகிரேஷன் அதிகாரிகள் பயணிகளின் உடமை கள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை பரிசோதித்தனர்.  அப்போது மலேசியாவில் இருந்து வந்த இராம நாதபுரம் மாவட்டம் சித்தர்கோட்டை பகுதியைச் சேர்ந்த சையது கமல் (62) என்பவரின் பாஸ்போர்ட்டை சோதனை யிட்டனர். அதில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்  பெற்றது தெரிய வந்தது. இதில் அப்பாவின் பெயர்,  முகவரி, பிறந்த தேதி ஆகியவை தவறாக குறிப்பிடப் பட்டது தெரிய வந்தது. உடனே சையது கமலை இமிகி ரேஷன் அதிகாரிகள் ஏர்போர்ட் காவல் துறையில் ஒப்ப டைத்தனர்.  ஏர்போர்ட் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, கைது  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் திருச்சிக்கு வந்த நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்த முகமது பைசல் என்பவரை யும் ஏர்போர்ட் காவல் துறையினர் கைது செய்தனர்.

வாலிபர் சங்க திருவாரூர் ஒன்றியக் குழு பேரவை

திருவாரூர், ஜுன் 17 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவாரூர் ஒன்றியக் குழு சிறப்பு பேரவை கூட்டம் கட்சியின் மாவட்டக்  குழு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரவைக்கு ஒன்றியத் தலைவர் கே.சதீஷ் தலைமை வகித்தார். ஜெ.வானதீபன் வரவேற்றார். மாவட்டப் பொரு ளாளர் எம்.டி.கேசவராஜ் துவக்க உரையாற்றினார். புதிய நிர்வாகிகளை அறிவித்து மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேல வன் நிறைவுரையாற்றினார்.  13 பேர் கொண்ட ஒன்றிய குழுவிற்கு தலைவராக கே.கலை வாணன், செயலாளராக கே.இளையராஜா, பொருளாளராக கே.சதீஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டக் குழு  உறுப்பினர் கே.எஸ்.கோசிமணி மற்றும் முன்னாள் மாவட்ட  நிர்வாகி பி.ஆர்.எஸ்.சுந்தரையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மின் கம்பத்தில் மோதி  தனியார் பேருந்து விபத்து உயிர் தப்பிய பயணிகள்

அரியலூர், ஜூன் 16 - மின் கம்பத்தில் மோதி சாலையை விட்டு வயலில் இறங்கி தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. தஞ்சாவூரில் இருந்து திருமானூர் - திருமழப்பாடி வழியாக திருச்சி வரையில் தினசரி பேருந்து சேவையை  ஸ்ரீ பாலாஜி என்ற தனியார் பேருந்து வழங்கி வரு கிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி  திங்களன்று காலை சென்ற தனியார் பேருந்து, அரிய லூர் மாவட்டம் திருமழப்பாடி அருகே உள்ள புதுக்கோட்டை  கிராமப் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு சிறிது தூரம் சென்றது. அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி, வயல் பகுதியில் இறங்கியது. இதனால் பேருந்து முன்  கண்ணாடி உடைந்தது. எனினும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.  மின் கம்பத்தில் மோதி அங்கேயே பேருந்து நின்றிருந் தால் பெரும் ஆபத்து நேர்ந்திருக்கும். ஓட்டுநரின் திறமை யால் அந்த இடத்திலிருந்து சிறிது தூரம் சென்று, வயல் வெளியில் பேருந்து இறங்கியதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து திருமானூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில்  போதைப் பொருட்களுடன்  பெண் உட்பட 4 பேர் கைது

திருச்சிராப்பள்ளி, ஜூன் 17- திருச்சி காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் ரவிச்சந்தி ரன் தலைமையிலான போலீசார் காந்தி மார்க்கெட் மற்றும்  அதைச் சுற்றியுள்ள பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந் தனர். அப்போது ஜெயில் பேட்டை பகுதியில் ரோந்து  சென்ற போது, ஒரு டீக்கடை அருகில் பெண் உள்பட 4  பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர்.  அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர்கள் கான்ஸ், விமல், வி ஒன் புகையிலை உள்ளிட்ட  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள்  வைத்திருந்தது தெரிய வந்தது. இவை ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 15 கிலோ எடையுள்ளது. விசாரணையில் அவர்கள் ஜெயில் பேட்டையைச் சேர்ந்த சகாயராஜ், சந்திர மோகன் மனைவி ரேவதி, உறையூரைச் சேர்ந்த மாரிமுத்து,  வரகனேரியைச் சேர்ந்த பதேஷ் குமார் என தெரிந்தது.  இதே போல் உறையூர் பகுதியில் கஞ்சா விற்றதாக  சதீஷ் என்ற வாலிபரை ஆய்வாளர் வெற்றிவேல் தலைமை யிலான போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து  1,100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வத்தலக்குண்டு அருகே தனியார் காட்டில் மணல் கடத்தல் டிப்பர் லாரிகள் பறிமுதல்

வத்தலக்குண்டு,ஜூன் 17- திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே சின்னுபட்டியை சேர்ந்தவர் பிரான்சிஸ். தொழிலதிபரான இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் காடு செக்காபட்டி அருகே மலையடிவாரத்தில் உள்ளது. பிரான்சிஸ் நேற்று  காலை காட்டை பார்வையிட சென்றபோது குளம் அளவு  மண் வெட்டப்பட்டு ஒரு ஹிட்டாச்சி மற்றும் 2 டிப்பர் லாரி கள் மூலம் மணலை கடத்திக் கொண்டிருப்பதை கண்டு  அதிர்ந்து போனார்.  உடனடியாக வருவாய்த் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்தார்.விரைந்து வந்த நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி,வருவாய் ஆய்வாளர் வெண்ணிலா,கிராம நிர்வாக அலுவலர் ஷர்மிளா பானு விருவீடு காவல் சார்பு ஆய்வாளர் திலகர்  மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.பின்னர் ஹிட்டாச்சி மற்றும் 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து  காவல் நிலையம் கொண்டு சென்றனர் இதுகுறித்து விசா ரணை நடந்து வருகிறது.

மதுரையில் வாய்க்காலில்  பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு

மதுரை, ஜூன் 17-  மதுரை திடீர்நகர் அருகே உள்ள ஹீரா நகரில் அவ்வழி யாக செல்லும் கிருதுமால் நதி வாய்க்காலில் பச்சிளம் ஆண் குழந்தை சடலமாக ஞாயிறன்று கிடந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியினர்   போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திடீர் நகர் போலீசார்  சம்பவ  இடத்துக்குச்சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  இதுதொடர்பாக போலீசார்  கூறுகையில்,  சடலமாகக்  கிடந்த குழந்தை நெகிழி பையில் சுற்றப்பட்ட நிலையில்  தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில் இருந்தது. மேலும் குழந்தை இரவிலோ அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலைúயிலோ வீசப்பட்டிருக்கலாம். குழந்தை உயிருடன் உள்ளபோதே வீசப்பட்டு உயிரிழந்ததா அல்  லது உயிரிழந்த பின்னர் வீசப்பட்டதா என்பது குறித்து  பிரேத பரிசோதனைக்குப் பின்னரே தெரிய வரும்.  எனவே  அப்பகுதியில் அண்மையில் பிரசவம் நடைபெற்றவர் களின் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. பட்டியல் கிடைத்த தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரி வித்தனர்.

உசிலம்பட்டியில் பிளாஸ்டிக் கழிவுகள்  சேமிப்பு கிட்டங்கியில் தீவிபத்து

மதுரை, ஜூன் 17-  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின் மயானம் அருகில்  நகராட்சிக்கு சொந்தமான நூண்ணுரம் செயலாக்க மையம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் தேங்கும் குப்பை களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை இந்த மையத்தில்  உள்ள இரு கட்டிடங்களில் சேமித்து வைத்து மறுசுழற்சிக்  காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் சேமித்து வைத்திருந்த கிட்டங்கியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை பெரு மளவு வெளியேறியது. உசிலம்பட்டி நகர் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.  இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி  தீயணைப்புத்துறை, டி.கல்லுப்பட்டி தீயணைப்புறை வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக  போராடி தீயை அணைத்தனர். இந்த கிட்டங்கி பகுதி யில் ஞாயிறன்றுநகராட்சி ஊழியர்கள் யாரும் பணியில்  இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

ஜம்புத்தீவு பிரகடனத்தின்  224 ஆவது ஆண்டு விழா

சின்னாளபட்டி, ஜூன் 17- வரலாற்றுச் சிறப்புமிக்க ஜம்புத் தீவு பிரகடனத்தின் 224வது ஆண்டு விழா, திண்டுக்கல் காந்திகிராம கிரா மிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கொண்டா டப்பட்டது.  காந்திகிராமம் கிராமிய நிகழ்நிலைப் பல்கலைக்கழ கத்தின் அரசியல் அறிவியல் மற்றும் மேம்பாட்டு நிர்வாகத்  துறை, சிவகங்கையைச் சேர்ந்த மாபெரும் மருது சகோ தரர்களை நினைவுகூரும் வகையில் ஜூன் 16 அன்று  ‘ஜம்பு தீவுப் பிரகடன தினத்தை’ ஏற்பாடு செய்திருந்தது. பதிவாளர் (பொ) முனைவர் எல்.இராதாகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். முன்னாள் அரசியல் அறிவி யல் பேராசிரியர் முனைவர் வி.ரகுபதி சிறப்புரையாற்றி னார். சமூக அறிவியல் புலத்தலைவர் முனைவர்.கே.வேலு மணி வாழ்த்துரை வழங்கினார். 

நத்தம் பகுதியில் பலாப்பழ சீசன் துவங்கியது  ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை

நத்தம், ஜூன் 17- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கரந்த மலை மலையூர், வலசு, பள்  ளத்துகாடு, லிங்கவாடி மலை யூர் உள்ளிட்ட கிராம பகுதி களில் ஆயிரக்கணக்கான பலாமரங்கள் உள்ளன. ஜூன்  முதல் வாரத்தில் அறுவடை யாகி தற்போது விற்ப னைக்கு வந்துள்ளன.  மலைக்கிராமங்களில் இருந்து தலைச்சுமையாக வும், குதிரைகள் மூலமாக வும் அடிவார பகுதிக்கு கொண்டு வரப்படும் இந்த  பலாப்பழங்கள் நத்தம் பகுதி யில் விற்பனைக்கு வந்துள் ளது. பலாப்பழங்கள் தற் போது 1 கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை வரை விற்பனை செய்யப்படுகிறது.ஒரு பலாப்பழம் குறைந்தது 5  கிலோ முதல் 10 கிலோ வரை  எடை கொண்டதாகும்.

கரும்பில் குருத்து முறுக்கல் நோய்: பாதுகாக்கும் வழிமுறைகள்

அரியலூர், ஜூன் 17 - அரியலூர் வட்டாரத்தில் கரும்பு பயிர் முக்கிய பணப் பயிராகும். இப்பயிர் நடப்பு பரு வத்தில் 250 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வளர்ச்சி பருவத்தில் உள்ளது. அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி  வேளாண்மை அலுவலர்கள் வயலாய்வு மேற்கொண்ட போது, இப்பயிரில் சில இடங்க ளில் மாவுப்பூச்சி மற்றும் குருத்து முறுக்கல் வாடல் நோய் தென்படுகிறது. குருத்து முறுக்கல் நோயின் அறிகுறிகள் பொக்கபாங் என்று அழைக்கக் கூடிய குருத்து முறுக்கல் நோய் பூஞ்சானம் மூலம் பரவக் கூடியதாகும். தாக்கப்பட்ட இளம்பயிர் முழு வளர்ச்சியடைந்து கரும்பாகாது. வயலில் சொட்ட விழும். தாக்கப்பட்ட பயிரின் கட்டைக் கரும்பின் தூர்களின் எண்ணிக்கை குறைந்து விடும். குருத்து முறுக்கல் எனும் பூஞ்சான நோய் மாவுப்பூச்சியால் பரவும். இந்த குருத்து முறுக்கல் நோயினால் இலைகள் திருகியும், முரடு தட்டியும், குறுகி நேர்குத்தியும் நிற்கும். தீவிர  நோய் தாக்குதலின் போது குறுத்து காயும். நடவுப் பயிரைவிட கட்டைக் கரும்பில் இப்பூச்சி  மற்றும் நோயின் தீவிரம் அதிகம் தென்படும். இதனைக் கட்டுப்படுத்த கரும்பு இனப் பெருக்க நிலையம், கோயம்புத்தூர் கரும்பு  ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி, திருச்சி மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் பரிந்துரைக்கப்பட்ட தொழில் நுட்பங் களை பின்பற்றி கட்டுப்படுத்தலாம். மேலாண்மை முறைகள் கரும்பை தொடர்ச்சியாக 3 முறைக்கு மேல்  பயிரிடக் கூடாது. பயிர் சுழற்சி முறையினை பின்பற்ற வேண்டும். ஏக்கருக்கு 5 மெ.டன் தொழு உரம் அல்லது வேப்பம் புண்ணாக்கு 1 மெ.டன் இட வேண்டும். நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் கார்பன்டாசிம் 50 சதவீதம் WP  ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 கி.என்ற அளவிலும்  கலந்து வேர் பகுதியில் ஊற்ற வேண்டும். ஒன்றிரண்டு மாவுப் பூச்சிகள் குருத்தருகில் தென்பட்டவுடன், இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல்.O.3 மி.லி/லி. என்ற அளவிலும் கார்பன் டாசிம் 50 சதவீதம் 1கிராம்/லி என்ற அளவிலும்  அடிக்க வேண்டும். மருந்தடித்த 15-20 நாட்க ளில் பூச்சி மறுபடி தென்பட்டால் மீண்டும் ஒரு முறை மருந்துக் கலவையை உபயோகப் படுத்தி இந்நோயிலிருந்து கரும்புப் பயிரினை பாதுகாத்து அதிக மகசூல் பெறலாம் என அரிய லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

அரியலூர், ஜூன் 17 - பசுந்தாள் உரம் என்பது பசுமையான சிதைக்கப்படாத பொருட்களை உரமாக பயன் படுத்திட, அதே நிலத்தில் விதைத்து அந்த  தாவரம் பூ பூப்பதற்கு முன் அதே நிலத்தில்  மடக்கி உழுது உரமாக்க வேண்டும். இது பசுந்தாள் உரம் பயிர் எனப்படும்.  மேலும் மரம் செடி கொடிகளின் தழை களையும் நிலத்தில் இட்டு மடக்கி உழவு செய்யலாம். இது பசுந்தழை உரம் எனப்படும்.  மண் வளமாகவும் நலமாகவும் இருக்க குறுவை (அ) சம்பா  சாகுபடி செய்யப் போகும்  நிலங்களில் பசுந்தாள் உரங்களை பயிரிட லாம். சணப்பு, தக்கைப்பூண்டு, மணிலா, அகத்தி மற்றும் கொளிஞ்சி போன்ற தாவ ரங்கள் பசுந்தாள் உரங்களுக்கு எடுத்துக் காட்டு ஆகும்.  இவை காற்றில் உள்ள நைட்ரஜனை கிரகித்து கொண்டு வேர் மற்றும் தண்டு  முடிச்சு வாயிலாக நிலத்தில் தழைச்சத்தினை சேமிக்கிறது. நன்றாக கோடை உழவு செய்து அடுத்த சாகுபடிக்கு தயாராக உள்ள  நிலையில், இந்த விதைகளை நிலத்தில் விதைக்கலாம். ஏக்கருக்கு 15-20 கிலோ வரை தேவைப்படும். விதைத்த பின் நீர் பாச னம் செய்து, 45-50 ஆவது நாளில் அவற்றை  மடக்கி உழவு செய்வதால், அவை மக்கி  மண்ணில் இரண்டற கலந்து நெல் நடவிற்கு  தயாராகலாம்.  பசுந்தாள் உரப்பயிரின் பயன்கள் நிலத்தின் மண்வள கட்டமைப்பு மாறி மண்ணின் கரிமத் தன்மை அதிகரிக்கும். மண்ணில் காற்றோட்டம் ஏற்படும் இறுகிய  தன்மை மாறும். நீர் பிடிப்புத் திறன் அதிகரிக் கும். களைச்செடிகளை கட்டுக்குள் வைக்க  உதவும். மண் அரிப்பை தடுக்க உதவும். விளைச்சலில் 15-20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பசுந்தாள் உரப்பயிர், தக்கைப்பூண்டு, விதைகள் 50 சதவீத மானியத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் முதல் வரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின்கீழ்  ஏக்கருக்கு 20 கிலோ விதை 50 சதவீத மானி யத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படு கிறது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப் பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  நிலத்தின் மண்வளத்தை மேம்படுத்தி ரசாயன உரங்கள் பயன்பாட்டை படிப்படி யாக குறைக்க, பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வமுடன் முன்வர வேண்டும் என செந்துறை வட்டார  வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா தெரி வித்துள்ளார்.

;