districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை அலுவலகம் திறப்பு விழா

திருச்சிராப்பள்ளி, ஜூன் 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் பொன்மலை பகுதி குழு  அலுவலக திறப்பு விழா ஞாயிறன்று ரஞ்சித புரம் பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு பொன்மலை பகுதி குழு உறுப்பினர் சீனிவா சன் தலைமை வகித்தார். பகுதி குழு உறுப்பி னர்கள் ரமேஷ், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கட்சி கொடியை மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஏற்றி னார். அலுவலக பெயர் பலகையை மாநகர்  மாவட்டச் செயலாளர் ராஜா, அலுவலக கட்டி டத்தை மாநில செயற்குழு உறுப்பினர் பால பாரதி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர்  லெனின் ஏற்றினார். கட்சித் தலைவர்களின் படங்களை மூத்த தோழர்கள் கே.வி.எஸ்.  இந்துராஜ், சேது அம்மாள், ராஜகுமாரி, ராமதாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ரேணுகா, கார்த்திகேயன், மணிமா றன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மகேந்தி ரன், ஜெயராமன், சுரேஷ் ஆகியோர் திறந்து  வைத்தனர்.  தோழர் பாலபாரதி எழுதிய ‘லட்சிய நதியாக (பாப்பா உமாநாத்தின் வாழ்க்கை வர லாறு)’ என்ற புத்தகத்தை மூத்த தோழர் வைரமணி மறு வெளியீடு செய்ய, அதனை பொன்மலை கிளை உறுப்பினர் பாலாமணி பெற்றுக் கொண்டார். முன்னதாக பொன் மலை பகுதி குழு உறுப்பினர் புவனேஸ்வரி  வரவேற்றார். பொன்மலை பகுதி செயலா ளர் விஜயேந்திரன் நன்றி கூறினார்.

;