districts

img

வருவாய் ஆய்வர் குடியிருப்பு அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுகோள்

பாபநாசம், செப். 20-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் வட்டாரக் கல்வி அலுவலகம் செயல்பட்டு வந்தது.  சில வருடங்களுக்கு முன் வட்டாரக் கல்வி அலுவலக கட்டடம் இடிக்கப்பட்டு, அந்த அலு வலகம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் ஒரு  வகுப்பறையில் இயங்கி வருகிறது. மெயின் சாலையில் அலுவலக கட்டடம் இடிக்கப்பட்ட இடத்தில்,  மீண்டும் வட்டாரக் கல்வி அலுவலகத்திற் கென கட்டடம் கட்டப்படவில்லை. அந்த இடம் காலியாக கிடப்பதால், திறந்த வெளி கழிப்பறையாக, மது அருந்தும் இடமாக பயன்பட்டு வருகிறது.  பாபநாசம் கிளை நூலகத்திற்கு இடமில்லாமல், பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது. இதில் கிளை நூலகம் கட்ட இடம் ஒதுக்கலாம். இல்லையென்றால், பாபநாசம் வருவாய் ஆய்வர் குடியிருப்பு அலுவலகத்திற்கென கட்டடம் கட்டலாம் என பாபநாசம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.