districts

img

விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் நில அதிர்வு: மக்கள் அச்சம்

விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் , தாயில்பட்டி, செவல்பட்டி, திருத்தங்கல், சாட்சியாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவ்காசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, திருவேங்கடம்,ராஜபாளையம் போன்ற பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதனையடித்து, மக்கள் அச்சமடைந்து சாலைகளில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 3 என்ற ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.