districts

திருச்சி முக்கிய செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு  நிவாரணம் வழங்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, மே 26- தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி  புறநகர் மாவட்டக் குழு கூட்டம் சனிக்கிழமை  வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர்  சிதம்பரம் தலைமை வகித்தார். மாநில  துணைத் தலைவர் முகமது அலி, மாவட்டச் செயலாளர் நடராஜன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.  உப்பிலியபுரம் ஒன்றியத்தில் பி.மேட்டூர், பாலகிருஷ்ணபுரம், கோட்டப்பாளையம் மற்றும் வரி வட்டிபாளையம் போன்ற கிராமங் களில் கோடை நெல் சாகுபடி செய்து அறு வடைக்கு தயாரான நிலையில், பருவநிலை மாறி பெய்த மழையால் நெற்பயிர்கள் முற்றி லும் சாய்ந்து முளைப்பு ஏற்பட்டு பாதிக்கப் பட்டுள்ளது. இதில் சுமார் 300 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொட்டியம் ஒன்றியம், காட்டுப்புத்தூர் பகுதியில் வாழை மற்றும் வெற்றிலையும் மழையால் பாதிப்படைந்துள்ளன. லால்குடி ஒன்றியம் வாளாடி பகுதி மற்றும் அன்பில் பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த எள் பயிர், முற்றிலும் உதிர்ந்து சேதம் ஏற்பட்டது. எனவே திருச்சி மாவட்ட ஆட்சியர் இவ்விவகாரத்தில் தலையிட்டு, அதிகாரிகள் மூலம் கள ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவார ணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், சீனிவாசன், குருநாதன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தீக்கதிர் செய்தி எதிரொலி சேதமடைந்த பயணியர் நிழற்குடை இடிப்பு

பாபநாசம், மே 26 -  தஞ்சாவூர் மாவட்டம்  மெலட்டூர் அருகே சுரைக் காயூர் ஊராட்சி, பயணி யர் நிழற்குடையானது, மக்கள் மழைக்கு ஒதுங் கக் கூட பயப்படும் நிலை யில் சேதமடைந்து இருந் தது. இதுகுறித்த செய்தி தீக்கதிர் நாளிதழில் வெளியானது. இச்செய் தியின் எதிரொலியாக பயணியர் நிழற்குடை இடிக்கப்பட்டது.

மின்சாரம் தாக்கி பெண் பலி

பாபநாசம், மே 26-  தஞ்சாவூர் மாவட்டம்  மெலட்டூர் அருகே நெய்த லூரைச் சேர்ந்தவர் புண்ணிய சேகரன். இவ ரது மனைவி ஜெகதாம் பாள் (65). நெய்தலூரில் தனியாரின் நடவு வயலில் ஜெகதாம்பாள் மற்றும் சிலர் சனிக்கிழமை மதியம் களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஜெகதாம் பாள் மின் கம்பி அறுந்து  கிடந்ததை கவனிக்கா மல், அதை மிதித்த நிலை யில், மின்சாரம் தாக்கி அதே இடத்தில் உயிரி ழந்தார். இதுகுறித்து மெலட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண் டுள்ளனர்.

கஞ்சா விற்ற இருவர் கைது

தஞ்சாவூர், மே 26-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் துறை துணை கண்கா ணிப்பாளர் பாஸ்கர் மேற்பார்வையில், பட்டுக் கோட்டை காவல் ஆய்வா ளர் ராஜா, உதவி ஆய்வா ளர் டேவிட் மற்றும்  தனிப்படை காவல்துறை யினர் போதைப் பொருட்கள் விற்பனை குறித்த கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவ லின்படி, பட்டுக்கோட்டை பாரதி நகர் பகுதியில் சோதனை செய்த போது,  தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டியை சேர்ந்த லட்சுமி (50), பட்டுக்கோட்டை பாரதி நகர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த முனியம்மாள் (70) ஆகிய இருவரிடமும் விற்பனைக் காக வைக்கப்பட்டிருந்த 11 கிலோ 325 கிராம் கஞ்சாவை கைப்பற்றி இருவரையும் கைது செய்தனர். 

கெட்டுப் போன  70 கிலோ மீன்கள் பறிமுதல்

விருதுநகர், மே 26- விருதுநகர் கச்சேரி சாலை, புதிய பேருந்து நிலை யம் அருகே மீன் சந்தைகள் உள்ளன. இங்கு மீன் வளர்ச்சித்துறை அதிகாரி மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்பு அலுவலர் அம்ஜத்கான் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர்.  அப்போது, அங்கு சில கடைகளில் கெட்டுப் போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, 70 கிலோ அளவி லான  கெட்டுப்போன மீன்களை  பறிமுதல் செய்தனர். அதன்  மொத்த மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும்.  பின்பு,  அவற்றை பினாயில் ஊன்றி அழித்தனர். மேலும், மீன்களை வாங்க வந்த வாடிக் கையாளர்களிடம்,  கெட்டுப் போன மீன்கள் எவ்வாறு  இருக்கும். அதை உண்பதால் ஏற்படும் உடல் உபாதை கள் பற்றியும்  விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பராமரிக்காததால் 65 கேமராக்கள் செயல்படவில்லை
அறந்தாங்கியில் தொடரும் திருட்டு சம்பவம்

அறந்தாங்கி, மே 26- புதுக்கோட்டை மாவட்டத்தின் 2 ஆவது பெரிய நகரமாக அறந்தாங்கி நகராட்சி இருக்கிறது.  இங்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வணிகர்கள் வணிக செய்து வரும் நிலையில், அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பாக கடந்த 2018 இல் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 65 கேமராக்கள் அறந்தாங்கி முக்கிய நகர் பகுதிகளில் பொருத்தப்பட்டன.  இதனை திருச்சி மண்டல டிஐஜி ஆனிவிஜயா மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சரவணகுமார் திறந்து வைத்தனர். இதனால் அறந்தாங்கி பகுதிகளில் குற்றச் சம்பவம் குறைந்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அறந்தாங்கியில் பொருத்தப்பட்ட கேமராக்கள் அனைத்தும் சரியாக பராமரிக்கப்படவில்லை. காவல்துறையினரின் இந்த அலட்சியத்தால் தற்போது குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதுகுறித்து அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி சங்க பட்டைய தலைவர் தங்கதுரை கூறுகையில், “அறந்தாங்கி பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதி அறந்தாங்கி முக்கிய நகர் பகுதிகளில் 65 கேமராக்கள் பொருத்தி காவல்துறையிடம் ஒப்படைத்தோம். ஆனால் சரியான முறையில் கேமராக்களை பராமரிக்காததால், இப்போது அறந்தாங்கி நகர் பகுதியில் மூன்று கடைகளில் ரூ.86 ஆயிரம் பணத்தை கொள்ளை போயிருக்கிறது. அறந்தாங்கி நகர் பகுதியில் பொருத்தப்பட்ட கேமரா செயல்படாததால் இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. உடனே கேமராக்களை சரி செய்து செயல்படுத்த வேண்டும்.  போதிய காவலர்களை நியமித்து இரவு ரோந்து செல்ல வேண்டும். அறந்தாங்கியில் குற்றச் சம்பவங்களை தடுக்க வேண்டும் என காவல் துறையையும் தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

ஹார்டுவேர்ஸ் கடை, சூப்பர் மார்க்கெட்டில் திருட்டு

அறந்தாங்கி, மே 26 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில்  ஹார்டுவேர்ஸ் கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடை உள்ளது. இந்த  கடையை வழக்கம்போல் ஞாயிறன்று உரிமையாளர்கள் திறக்க வந்தனர்.  அப்போது, ஏற்கனவே கடைகள் உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு  அதிர்ச்சியடைந்தனர். பின்பு கடைக்குள் சென்று பணப் பெட்டியை பார்த்த போது, ஹார்டு வேர்ஸ் கடையில் இருந்த ரூ.56 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் சூப்பர்  மார்க்கெட்டில் இருந்த ரூ.30 ஆயிரம் பணம், பேரிச்சம்பழம் ஆகியவை  திருடு போயிருந்தன. இதுகுறித்து உடனே அறந்தாங்கி காவல்துறையின ருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த  கிரைம் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான காவ லர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதில், அருகில் இருந்த மளிகை கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை  காவலர்கள் ஆய்வு செய்த போது, கொள்ளையர்கள் இரண்டு கடை களில் திருடி விட்டு மூன்றாவதாக மளிகை கடையின் பூட்டை இரும்பு  கடப்பாரையால் உடைப்பது தெரிந்தது. அவர்கள் மாஸ்க் அணிந்து, கை ரேகை தெரியாமல் இருப்பதற்காக கை உறை மற்றும் காலில் சூ மாட்டிக்  கொண்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரத்தில் அறந்தாங்கி பகுதிகளில், காவலர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிலத் தகராறு: செல்போன் டவர் மீது ஏறி போராட்டம்

பாபநாசம், மே 26- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பெரு மாக்கநல்லூரை அடுத்த தென்னங்குடி பகுதியைச் சேர்ந்த வர் லெட்சுமணன் (49). இவர் அய்யம்பேட்டையை அடுத்த  சக்கராப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வந்தார்.  இந்நிலையில் நிலத்தின் உரிமையாளர், நிலத்தை லெட்சுமணனிடம் விற்பதாகக் கூறி ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்டதாகவும், அதே நிலத்தை இன்னொருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு விற்று விட்டதாகவும் கூறப்படு கிறது. இதனையடுத்து விவசாய நிலத்தை மீண்டும் எனக்கே தர வேண்டும், இல்லையென்றால் பணத்தை தர வேண்டும் எனக் கூறி, அய்யம்பேட்டை கால்நடை மருந்த கம் அருகில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் டவர் மீது ஏறி லெட்சுமணன் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து தீயணைப்பு நிலையத்தினர் மற்றும்  அய்யம்பேட்டை போலீசார் லெட்சுமணனிடம் பேச்சுவார்த்தை  நடத்தினர். இதையடுத்து லெட்சுமணன் கீழே இறங்கி வர,  அவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெயக்குமார் குடும்பத்தினரிடம்  6 மணி நேரம் விசாரணை 

திருநெல்வேலி, மே 26- நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் மர்மச்சாவு வழக்கை கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி. சி.ஐ.டி. அலுவலகத்திற்கு ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெப்ரின், ஜோ மார்ட்டின், மகள் கேத்தரின் ஆகியோர் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வருமாறு அழைக்கப்பட்டு இருந்தனர்,இதனை தொடர்ந்து அவர்கள் சனிக்கிழமை மதியம் ஒரு காரில் சி.பி.சி.ஐ.டி.  அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது கேத்தரின் கை குழந்தையுடன் விசாரணைக்கு வந்திருந்தார். பின்னர் அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி.எஸ்.பி  முத்தரசி நேரடி விசா ரணை நடத்தினார்.அதன்பின்னர் கூடுதல் போலீஸ்  எஸ்.பி. சங்கர், மற்றொரு கூடுதல் எஸ் பி  ராஜ்குமார் நவ்ரோஜ்  ஆகியோர் முன்னிலையில் அவர்களது குடும்பத்தினர் சம்பவத் தன்று நடந்த நிகழ்வுகள், ஜெயக்குமாரின் செல் போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்டு பேசியவை உள்ளிட்டவற்றை விளக்கமாக எழுதி ஒப்படைத்தனர். இந்த விசாரணையானது மாலை 6.45 மணி வரை அதா வது சுமார் 6 மணி நேரம் வரை நீடித்தது. அதன்பின்னர் ஜெயக்குமார் குடும்பத்தினர் காரில் ஏறி ஊருக்கு புறப்பட்ட னர். தொடர்ந்து  ஞாயிற்றுக்கிழமை ஒரு குழு கரைசுத்து  புதூருக்கு சென்று ஜெயக்குமாரின் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் விசாரணை நடத்தியது.    ஜெயக்குமார்  எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய பிர முகர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு தேவை யான ஆவண பணிகளை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

சிறுமியிடம் செயின் பறிப்பு

குழித்துறை, மே 26- நாகர்கோவில் கேம்ப் ரோடு பகுதியில் சேர்ந்தவர் அஜிதா(37)அவரது தாயார் வீடு நித்திரை விலை அருகே சின்னதுரை கே ஆர் புரம் பகுதியில் உள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு 9 வயது மகளுடன் தாயார்  வீட்டுக்கு வந்துள்ளார் .குடும்பத்துடன் வீட்டில் உட்கார்ந்து  பேசிக் கொண்டிருந்த போது , 9 வயது மகள் உற வினர் குழந்தைகளுடன் வீட்டின் முன்னால் உள்ள சாலை யில் சனி அன்று இரவு 8 மணி அளவில் சைக்கிள் ஓட்டிக்  கொண்டிருந்தது .இந்த நேரத்தில் சுமார் 50 வயது மதிக்கின்ற  மாஸ்க் அணிந்த மர்மநபர் இருசக்கர வாக னத்தில் வந்து சிறுமியிடம் நைசாக பேசி கழுத்தில் கிடந்த  ஒரு பவுன் தங்கச் செயினை பறித்து தப்பி ஓடிவிட்டார் . இது குறித்து அஜிதா நித்திரை விளை காவல் நிலை யத்தில் புகார் செய்தார் . சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு  வந்த காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசி டிவி  கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசா ரணை செய்து வருகின்றனர்.

மின்சாரம் தாக்கியதில்  தூக்கி வீசப்பட்டவர்   சாவு 

திருநெல்வேலி, மே 26- நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மாவடி  தெற்கு தெருவை சேர்ந்தவர் ஏசுதாசன் (60). இவருக்கு  விமலா என்ற மனைவியும், 3 மகன்களும், 3  மகள்களும்  உள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை ஏசுதாசன் மலை யடிபுதூர் மேற்கு பகுதியில் உள்ள ராஜன் என்பவருக்கு  சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டி ருந்தார். அப்போது அங்குள்ள மின்கம்பத்தின் அருகே  நடப்பட்டுள்ள ஸ்டே வயரை ஏசுதாசன் கையில் பிடித் துள்ளார். இதில் மின்கம்பி உரசிக் கொண்டிருந்ததால் ஏசு தாசன் மீது மின்சாரம் பாய்ந்து அவரை தூக்கி வீசி யது. இதில் உடலில் மின்சாரம் பாய்ந்த ஏசுதாசன் சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.  இது குறித்து திருக்குறுங்குடி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து  வந்து ஏசுதாசன் உடலை மீட்டு உடற்  கூறாய்வுக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  சம்பவம் குறித்து வழக்கு பதிந்து காவல் ஆய்வாளர்  தர்ம ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

ட்ரை சைக்கிள் மீது கார் மோதி விபத்து    2 பெண்கள் உட்பட 3 பேர் பலி; 4 பேர் படுகாயம்

தூத்துக்குடி, மே 26 ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கன் மகன் சிலம்பரசன் (35). ஆறுமுகம்  மனைவி மாரியம்மாள் (66), சிலம்பரசன் மனைவி தங்கம் மாள் (35), முருகன் மகன் சதீஷ் (7) ஆகிய 4பேரும் மோட்டார் மாட்டிய மூன்று சக்கர சைக்கிளில் ஊர் ஊராக  சென்று பழைய பேப்பர் அட்டை பிளாஸ்டிக் பாட்டில் வாங்கி தூத்துக்குடியில் உள்ள கடையில் விற்பனை செய்து வந்தனர்.   ஞாயிற்றுக்கிழமை காலை கிழக்கு கடற்கரை சாலை ரோட்டில் சூரங்குடி அருகே உள்ள கீழ சண்முக புரம் கிராமத்தில் பழைய பேப்பர்களை வாங்கிக் கொண்டு  சாலையைக் கடக்கும் போது கன்னியாகுமரியில் இருந்து  வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற கார் மூன்று சக்கர  சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மாரியம்மாள், தங்கம்மாள், சதீஷ் ஆகிய 3பேர்களும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். காயமடைந்த சிலம்பரசன், காரில் வந்த குமரி மாவட் டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (55),  அவரது மனைவி குமரித்தங்கம் (49),  கார் ஓட்டி வந்த  அவரது மகன் ஜெனிட் (29) ஆகிய 4பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய ஆய்வா ளர் (பொ) வெங்கடேச பெருமாள் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உடலில் தீ வைத்த நபரால் பரபரப்பு

தூத்துக்குடி, மே 26 தென்காசி மாவட்டம் ஆலங்குளம், கடங்கனேரியைச் சோ்ந்தவர் மாதவன் (52).  இவருக்கு 4 குழந்தைகள் உள்ள னா். இவா், திருச்செந்தூா் கோயில் கடற்கரை அய்யா அவ தாரபதி கலையரங்கு அருகே சனிக்கிழமை  மது போதை யில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொண்டா ராம். தீக்காயமடைந்த அவரை அங்கிருந்தோா் அவசர ஊா்தியில் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவிக்குப் பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனா்.

திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்,  நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில்கள் சேவை ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

மதுரை, மே 26-  அம்பாசமுத்திரம், தென்காசி, இராஜ பாளையம், மதுரை வழியாக இயக்கப் படும் திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி, தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில்கள் சேவை மே  மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே  அறிவிக்கப்பட்டு இருந்தது.  தற்போது இந்த ரயில்களின் சேவை  மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  இதன்படி திருநெல்வேலியில் இருந்து  இரவு 7 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளை யம் சிறப்பு ரயில் (06030) ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 7.30  மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று  சேரும்.  மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளை யத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஜூன் 3, 10, 17, 24, 31 ஆகிய திங்கட்  கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி வந்து  சேரும்.  இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதேபோல், நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரயில் (06012) ஜூன் 2, 9, 16, 23, 30  ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்  பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு  தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில்  தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு  ரயில் (06011) ஜூன் 3, 10, 17, 24, 31 ஆகிய  திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு இரவு  8.55 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.  இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்  பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

மே 29-ல் கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு

தூத்துக்குடி, மே 26 தூத்துக்குடியில் வரும் 29ஆம் தேதி புதன்கிழமை கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இது தொடர்பாக  தூத்துக் குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவகுமரன் வெளியிட்ட செய்திக் குறிப் பில், “தமிழ்நாடு கிரி்க்கெட்  சங்கம் நடத்தும் மாவட்டங் களுக்கு இடையிலான 14 வயது போட்டிக்கு 01.09. 2010 அன்றோ அல்லது அதற்கு பிறகோ மற்றும் 16  வயதுக்கு உட்பட்ட கிரிக் கெட் போட்டிக்கு 01.09.2008 அன்றோ அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும். அதற்கான தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு வரும் 29.05.2024  அன்று தூத்துக்குடி பெரிசன் பிளாசா எதிர் புரம் அமைந்துள்ள  JMJ கிரிக் கெட் பயிற்சி மையத்தில்  காலை 7 மணிக்கு நடைபெற வுள்ளது.  மேலும் தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் (கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள்) ஆதார் நகல், அண்மையில் எடுக்கப் பட்ட பாஸ்போர்ட் அளவு போட்டோ, பிறப்பு சான்றிதழ் pdf வைத்து கொள்ள வேண்டும்.   தேர்வாகும் வீரர்கள் அனைவருக்கும் சிறப்பான பயிற்சி அளிக்கப்படும். மேலும் வரும் ஜுன் மாதம் நடைபெறும் மாவட்ட அள விலான  போட்டியில் கலந்து கொள்வார்கள்.  மேலும் விபரங்களுக்கு இணைச்செயலாளர் கிரிஸ்பின் (8015621154) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்  என்று தெரி வித்துள்ளார்.



 

;