districts

திருச்சி முக்கிய செய்திகள்

தேனீ வளர்ப்பு விழிப்புணர்வு

தஞ்சாவூர், மே 22-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செண்டாங்காடு கிராமத்தில், ஈச்சங் கோட்டை முனைவர் எம். எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய  மாணவிகள் சார்பில், தேனீ வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  ஒவ்வொரு ஆண்டும், மே 20 அன்று உலக தேனீக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, செண் டாங்காடு எனும் கிராமத் தில், வேளாண் கல்லூரி மாணவிகள் ‘தேனீ வளர்ப்பு’ குறித்த விழிப்பு ணர்வு பணியில் ஈடுபட்ட னர். இதில் தேனீக்களின் முக்கியத்துவம் பற்றியும்,  விவசாயம், சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் பல்லு யிர் பாதுகாப்பு, மகரந்தச் சேர்க்கை ஆகியவற்றில் தேனீக்களின் இன்றிய மையாத பங்கு, தேனீ வளர்ப்பு, தேன், மெழுகு  உற்பத்தி, அதனால் கிடைக் கும் லாபம் பற்றி வேளாண் கல்லூரி மாண விகள் விளக்கமளித்த னர். இதில் இளைஞர்கள், ஊர் பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். 

போலி மருத்துவர் கைது

அரியலூர் மே 22- ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்த மருந்து கடை உரிமையாளரை போலீ சார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம்  குருவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி யன் (52). இவர் அதே பகுதியில் ஹரிஷ் என்ற பெயரில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்நி லையில் இவர் ஆங்கில (அலோபதி) மருத்துவம் படிக்காமல் அப்பகுதி மக்களுக்கு மருத்துவம் செய்வதாக மாவட்ட மருத்துவத் துறை துணை  இயக்குநர் மாரிமுத்து விற்கு புகார் அளிக்கப் பட்டது. புகாரின் பேரில் புதன் கிழமை வீரபாண்டியனின் மருந்து கடையில் மாவட்ட மருத்துவத் துறை  துணை இயக்குநர் மாரி முத்து திடீர் ஆய்வு செய் தார். அப்போது அலோ பதி மருத்துவம் படிக்கா மல் மருத்துவம் பார்த்தது கண்டறியப்பட்டது. இது குறித்து தூத்தூர் காவல்  நிலையத்தில் மருத்துவத் துறை துணை இயக்குநர் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிந்து வீர பாண்டியனை கைது செய்தனர்.

வேளாண் மாணவிகள் களப் பயிற்சி 

தஞ்சாவூர், மே 22-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி யில் ஈச்சங்கோட்டை முனைவர் எம்.எஸ்.சுவாமி நாதன் வேளாண் கல்லூரி  மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிரா மப்புற வேளாண்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனொரு பகுதி யாக பட்டுக்கோட்டை அருகே உள்ள பசும்பொன் நகர், சிவக்கொல்லையில்  அமைந்துள்ள ஸ்ரீ அகத்தி யர் மூலிகை வனத்தில்  வேளாண் கல்லூரி மாண விகள் களப்பணியில்  ஈடு பட்டனர். அங்கு வெண்டை,  கொத்தவரை, முள்ளங்கி,  வெள்ளரி, பாகற்காய் மற்றும் கீரை விதை களை அவரின் வயலில் விதைத்தும், அங்குள்ள செவ்வாழை, பச்சை நாடன், மொந்தன் போன்ற  வாழை இனங்களில் களையெடுத்தும் பயிற்சி யில் ஈடுபட்டு அனுபவம் பெற்றனர்.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்தது: பாத்திரக் கடை சேதம்

தஞ்சாவூர், மே 22-  சேதுபாவாசத்திரம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான, மேல்நிலை  நீர்த்தேக்கத் தொட்டியை இடிக்கும் போது, அருகில் இருந்த வணிக வளாகத் தில் சுவர் இடிந்து விழுந்ததில் வாடகை  பாத்திரக் கடையில் உள்ள பொருட்கள்  சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட நபர் பேராவூரணி காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் அனுப்பி  உள்ளார்.  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகிலுள்ள குருவிக்கரம்பை யில் ஊராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதன் அருகே ஊராட் சிக்கு சொந்தமான சுமார் 30 அடி உய ரத்தில் பழுதடைந்த நிலையில் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை ஜேசிபி  இயந்திரம் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத்  தொட்டி இடிக்கப்பட்டது. அப்போது இப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது.  இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திடீரென இடிந்து, அருகில் இருந்த ஊராட்சிக்கு சொந்தமான வணிக  வளாகத்தில் ராமசாமி என்பவர் நடத்தி  வந்த வாடகை பாத்திரக் கடையின் மேல்  விழுந்தது. இதில் பாத்திரக் கடையின் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த 250-க்கும் அதிகமான பிளாஸ்டிக் சேர்கள்  மற்றும் அலுமினிய பாத்திரங்கள் சேத மடைந்தன. வணிக வளாகத்திற்கு எதிரே தனி யார் வங்கி, அருகில் போக்குவரத்து சாலையில் ஆட்கள்  நடமாட்டம் இல்லாத தால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப் பட்டது.  இதுகுறித்து ராமசாமி கூறுகையில், “நான் 2015 ஆம் ஆண்டு முதல் வாட கைக்கு இருந்து வருகிறேன். இது  மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி.  இங்கு ஊராட்சிக்கு சொந்தமான கட்டி டத்தை இடிக்கும் போது முன் அறிவிப்பு  கொடுக்க வேண்டும். ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்கும் போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என கூறுகின்றார்.  தொட்டியை இடிப்பதற்கு யார் அனு மதி வழங்கியது என தெரியவில்லை. பல லட்சம் ரூபாய் செலவில் ஊராட்சி யில் இருந்து கட்டப்பட்ட வணிக வளா கத்தில் ஒரு கடை மட்டுமின்றி, கட்டிடத் தில் பல்வேறு இடங்களில் விரிசல் விழுந் துள்ளது.  இதுகுறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பி யுள்ளேன். காவல்துறையிலும் புகார் அளித்துள்ளேன். விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஆதார் முகாமில் வேலை செய்யாத கணினியால் அவதி

தஞ்சாவூர், மே 22 -  தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள  அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தனியார் நிறு வனத்துடன் இணைந்து பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு ஆதார் திருத்தம், பதிவு  செய்வதற்கான முகாம் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இம்முகாம், மே 22, 23, 24 ஆகிய மூன்று தேதி களில் காலை 10:30 முதல் மாலை 4 மணி வரை  நடைபெறும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு  பள்ளிகளில் இருந்து மாணவர்களின் பெற்றோர் களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து, 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் புதனன்று  காலை 9 மணி முதல் ஆதார் பதிவு, திருத்தம்  செய்வதற்கான டோக்கன்களை வாங்கிக் கொண்டு  காத்திருந்தனர். இதற்காக 17 கணினிகள் வைக்கப் பட்டு, அதற்கான பணியாட்களும் வந்திருந்தனர். ஆனால், 11:30 மணியாகியும் எந்த ஒரு கணினியும்  முறையாக வேலை செய்யவில்லை. அதன்பிறகு கணினி பொறியாளர்கள் வரவழைக் கப்பட்டு, சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு ஆதார் சார்ந்த பணிகள் துவங்கப்பட்டன. அதில் எட்டு கணினிகள் மட்டுமே வேலை செய்தன. இத னால், மாணவர்களும் பெற்றோர்களும் அவதிக் குள்ளாகினர்.  முறையான ஏற்பாடுகள் செய்யாமல் பள்ளித் கல்வித்துறை அதிகாரிகள் ஏன் இந்த ஏற்பாட்டை செய்தனர் என பெற்றோர் பலரும் கேள்வி எழுப்பி னர்.

உண்மைக்கு புறம்பான  தகவலை பகிர வேண்டாம் தஞ்சை எஸ்.பி. அறிவுறுத்தல்

கும்பகோணம், மே 22- உண்மைக்கு புறம்பான தகவல்களை  பகிர வேண்டாம் என்பது குறித்து தஞ்சை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ரா வத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் குற்றச்  சம்பவங்கள் கஞ்சா போதையுடன்தான் நிகழ்வ தாக மிகைப்படுத்தி சிலர் உள்நோக்கத்துடன் பொதுமக்களுக்கு தவறான தகவல்களை  பரப்பி வருவது வாடிக்கையாக உள்ளது. அதேபோல அண்மையில் கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் நடந்த ஒரு கொலை வழக்கிலும், அவ்வாறே கொலையாளிகள் குற்றச் செயலை செய்ததாக சிலர் சமூக ஊட கங்களில் தெரிவித்திருந்தனர். போதைப் பொருட்கள் சம்பந்தமான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது உடன டியாக வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப் படுவதுடன் போதைப் பொருட்களால் ஏற்படும்  தீய விளைவுகள் பற்றி அவ்வப்போது பல் வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு  வருகின்றன.  போதைப் பொருட்கள் சம்பந்தமான குற்றச் செயல்கள் குறித்து புகார் தெரிவிக்க ஏற்கனவே 8300518020 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உண்மைக்கு புறம்பாக வரும் தகவல்களை பொதுமக்கள் யாரும் பகிர வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளார்.

தேர்த் திருவிழாவில்  கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர், மே 22-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆதனூர் -  கருப்பமனை -  கூப்புளிக்காடு கிராமத்தில் அருள்மிகு வீம நாயகி அம்மன் திருக்கோயில் வைகாசிப் பெருந்திரு விழா 9 ஆம் நாள் தேரோட்டத் திருவிழா செவ்வாயன்று நடைபெற்றது.  இத்தேரோட்டத்தை இப்பகுதி இந்து சமுதாய மக்க ளும், இங்கு வசித்து வரும் கிறிஸ்தவ மக்களும் ஒற்றுமையுடன் கொண்டாடி வருகின்றனர்.  பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார், திருக்கோ வில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், கோயிலுக்கு பாத்தியப்பட்ட கிராமங்களைச்  சேர்ந்த இரு சமுதாய பெரியோர்கள், பொதுமக்கள் தேரை  வடம் பிடித்து இழுத்தனர்.  மரக்கன்றுகள் வழங்கல் ஆதனூர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல், மரக்கன்றுகள் சுமார் 2 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டன. இதனை  பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக் குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். காவல் துறை ஆய்வாளர்கள் பசுபதி (பேராவூரணி), ஜெயமோ கன் (சேதுபாவாசத்திரம்), உதவி ஆய்வாளர் புகழேந்தி, சிங்கப்பூர் தொழிலதிபர் செந்தில்மாறன் ஆகியோர்  பல்வேறு வகையான மரக்கன்றுகளை வழங்கினர்.

புகையிலை, காலாவதியான  உணவுப் பொருள் விற்பனை  கடைகளுக்கு அபராதம் 

தஞ்சாவூர், மே 22 -  தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும்  காலாவதியான, கெட்டுப் போன உணவுப் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் அபராதம் விதித்ததோடு, தற்காலிகமாக கடைக்கு சீல் வைத்தனர்.  மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்  சித்ரா அறிவுறுத்தலின்படி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தில், பேராவூரணி, பட்டுக்கோட்டை வட்டார உணவு பாது காப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் காவல் துறை உதவி ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளடக்கிய குழுவினர் சேதுபாவாசத்திரம், மல்லிப் பட்டினம், சம்பைபட்டினம், செந்தலைப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.  இதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட் கள் மற்றும் கெட்டுப்போன, காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு அபரா தம் விதித்ததோடு தற்காலிகமாக கடையை மூடி சீல் வைத்தனர். 

கோடை மழையால் உழவுப் பணியில் விவசாயிகள்

பாபநாசம், மே 22 - கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் போது மான பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி விவ சாயிகள் உழவு மேற்கொண்டுள்ளனர். பம்பு செட்டு வசதி உள்ள விவசாயிகள் குறுவை விதை நெல் விட்டு,  நாற்று தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சில விவசா யிகள் நேரடி நெல் விதைக்க ஆயத்தமாகி வருகின்றனர்.  இதுகுறித்து கணபதி அக்ரஹாரம் முன்னோடி விவ சாயி சீனிவாசன் கூறுகையில், இந்த வருடம் மேட்டூர் அணையில் இருந்து, தண்ணீர் தாமதமாக ஆகஸ்ட் மாத  மத்தியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்,  குறுவை சாகுபடிக்கு அனைத்து விவசாயிகளுக்கும் வாய்ப்பு இல்லை.  எனவே பம்புசெட்டு மூலம், நேரடி விதைப்பின் மூலம்  குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக இந்த ஆண்டுக்கான குறுவை தொகுப்பு  திட்டத்தை அறிவிக்க வேண்டும். மேலும், இதில் உழவு,  விதை, உரம், களைக்கொல்லி, பூச்சி மருந்து அனைத்திற் கும் சேர்த்து அதிகளவில் இரண்டு மடங்காக நிதி ஒதுக்கி  வழங்க வேண்டும்” என்று டெல்டா விவசாயிகள் சார்பாக  கேட்டுக் கொண்டார்.

கார்கள் நேருக்கு நேர் மோதல்: பெண் பலி 

பாபநாசம், மே 22 - திண்டுக்கல் மாவட்டம் பிச்சை நாயக்கர் தெருவைச்  சேர்ந்தவர் நாகராஜ் மனைவி ராஜம் (55). இவரது மகள் கள் பத்மபிரியா (36), சத்யபிரியா(33). சத்யபிரியாவின் கணவர் சுரேஷ் (37)  உள்ளிட்டோர் செவ்வாயன்று மாருதி  ஸ்விப்ட் காரில் திண்டுக்கல்லில் இருந்து திட்டை கோயி லுக்கு வந்துவிட்டு, திண்டுக்கல்லுக்கு திரும்பிச் சென்றுக்  கொண்டிருந்தனர். காரை திண்டுக்கல், வத்தலக்குண்டு சாலைப் பகுதி யைச் சேர்ந்த ஹாஜா மைதீன் (50)  ஓட்டினார். கார் தஞ்சாவூர் - விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் ஜெம்பு  வாய்க்கால் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, எதிரே  தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இன்னோவா கார், மாருதி ஸ்வெப்ட் காரின்  மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணித்த ராஜம் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த சத்ய பிரியா, பத்மபிரியா, சுரேஷ், கார் ஓட்டுநர் ஹாஜாமைதீன் உள்ளிட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த மெலட் டூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சாக்கடை கால்வாய் இல்லாததால் மழைநீரில் தத்தளிக்கும் பூபாளி கிராமம்

கரூர், மே 22 - கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட பவித்ரம் ஊராட்சியில் உள்ள பூபாளி கிராமத்தில் தற்போது பெய்து வரும் கனமழையால், மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.   பூபாளி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது கரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பூபாளி கிராமம் அருகில் தேசிய நெடுஞ்சாலையின் உயரம் அதிகரித்துள்ளதால், குடியிருப்புகள் பள்ளத்தில் உள்ளன. இதனால் மழைநீர் வீடுகளுக்குள் சூழ்ந்துள்ளது. மழைநீர் செல்வதற்கு வடிகால் அமைக்காமல் இருப்பதே, மழை நீர் குடியிருப்புகள் புகுவதற்கு முக்கிய காரணம். ஒவ்வொரு முறை மழை பெய்யும் பொழுதும் மழைநீர் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் பொதுமக்கள் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். பவித்திரம் ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களின் துயரத்தை கண்டு கொள்ளாமல் பல ஆண்டுகளாக வேடிக்கை பார்த்து வருகிறது. எனவே, உடனடியாக சாக்கடை கால்வாய் அமைத்து, இதன்மூலம் மழைநீர் வடிந்து செல்வதற்கு வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனிவரும் காலமும் மழைக் காலமாகும். இப்பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுவதை தவிர்க்க வேண்டும் என்றால், சாக்கடை கால்வாய் அமைத்து கொடுப்பதுதான் நிரந்தர தீர்வை ஏற்படுத்தும். இந்த மக்களின் நியாயமான கோரிக்கைகள் மீது கரூர் மாவட்ட நிர்வாகம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியக் குழு, பவித்திரம் ஊராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பவித்திரம் கிளையின் சார்பில் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று கட்சியின் க.பரமத்தி ஒன்றியக் குழு உறுப்பினர் ப.சரவணன், கிளைச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

விதிமுறைகளை மீறிய 3 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்க! ஆட்சியருக்கு தனிவட்டாட்சியர் பரிந்துரை

சிவகாசி, மே 22- விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதியில் விதிமுறைகளை பின்பற்றாத 3 பட்டாசு ஆலைகளில் உரிமங்களை தற்காலிகமாக இரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு தனி வட்டாசியர் பரிந்துரை செய்துள்ளார். சிவகாசி அருகே கடந்த மே 9 அன்று கீழத்திருத் தங்கல் பகுதியில் செயல்பட்டு வந்த சுதர்சன் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 10 பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, 4 தனிக்குழு அமைத்து பட்டாசு ஆலை களை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார். அதன்பேரில், கீழத்திருத்தங்கல், நாராணபுரம், துலுக்கப்பட்டி ஆகிய பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளை தீப்பெட்டி மற்றும் பட்டாசு தனி தாசில்தார் திருப்பதி ஆய்வு செய்தார். அதில், கீழத்திருத்தங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் இராமகிருஷ்ணன் பட்டாசு ஆலையில் விதிகளை  மீறி தொழிலாளர்கள் மரத்தடியில் வைத்து பட்டாசு தயார் செய்து கொண்டிருந்தனர். நாராணபுரம் பகுதியில் உள்ள இரத்தினம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் காலி மனையில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து அதிலும், மரத்தடியிலும் பட்டாசு தயாரிப்பது தெரியவந்தது. மேலும், விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டியில் முத்துராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் மரத்தடியிலும் ஆஸ்பெட்டாஸ் செட் அமைத்து அதிலும் பட்டாசு தயாரிப்பது தெரியவந்தது. எனவே, தனி தாசில்தார், 3 பட்டாசு ஆலைகளின் உரிமத்தையும் தற்காலிகமாக இரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

வெளிநாட்டுப் பணிக்கு இந்திய தூதரகம்,  அரசு முகவர்கள் மூலமாக சென்றிடுக! மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை

மதுரை, மே 22-  கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகளில் நடைபெறும் பணி  மோசடிகளால் தமிழர்கள் ஏமாற்றப்படு கிறார்கள். இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வெளிநாடுகளுக்கு வேலை நிமித்த மாக செல்லும் இளைஞர்கள், ஒன்றிய அர சில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம்,  வேலைக்கான விசா, முறையான பணி ஒப்  பந்தம், என்ன பணி போன்ற விவரங்க ளைச் சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டும், அவ்வாறான பணி கள் குறித்து உரிய விவரங்கள் தெரியா விடில், தமிழ்நாடு அரசின் “அயலகத் தமி ழர் நலத்துறை” அல்லது குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்  மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள  வேண்டும். இந்திய வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளி லுள்ள இந்திய தூதரகங்களின் இணைய தளங்களில் வெளியிடப்படும் அறிவுரை களின் படியும், வெளிநாட்டு வேலைக்குச்  செல்லுமாறு இளைஞர்கள், பொதுமக்க ளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் விவரங்களை www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், சென்னை  குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி  எண் : 90421 49222 , poechennai1@mea. gov.in (LD) poechennai2@mea.gov.in  என்ற மின்னஞ்சல் மூலம் வெளிநாடு களுக்கு வேலைக்கு செல்வது தொடர பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு  உதவிபுரிய தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை செயல்பட்டு வரு கிறது. மேலும், வெளிநாடு வாழ் தமி ழர்களுக்கு உதவி தேவைப்படின் கட்ட ணமில்லா 24 மணி நேர அழைப்புதவி மையத்தின் பின்வரும் தொடர்பு எண்களை  தொடர்பு கொள்ளலாம். 18003093793, 8069 009901, 8069009900.(missed Call No.) எனவே, கம்போடியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் (Digital Sales and Marketing Executive), 5 L  (Data Entry Operator) வேலைக்கு செல்ப வர்களும், இதர நாடுகளுக்கு செல்ப வர்களும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவும் மேலும் வேலைக்கான விசா,  முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி போன்ற விவரங்களைச்சரியாகவும், முழு மையாகவும் தெரிந்து கொண்டும், அவ் வாறு பணி விபரம் தெரியவில்லை என்றால்  சென்னை அல்லது சம்மந்தப்பட்ட நாட்டில்  உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணிசெய்யப்போகும் நிறு வனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டும் அயல்நாடு களுக்கு வேலைக்கு செல்லுமாறு தெரி விக்கப்படுகிறது என்று மதுரை மாவட்ட  ஆட்சியர் மா.சௌ.சங்கீதா வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

;