விழுப்புரம், செப். 20- மரக்காணம் அருகே கொலை செய்த ரவுடியை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கலித்தி ராம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம், இவரது மகன் பாரதி என்கிற பாரதிதாசன் (22). ரவுடியான இவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த மாதம் 18 ஆம் தேதி மரக்காணம் அருகே கூனிமேடு கடற்கரை தர்கா அருகே முன்விரோ தம் காரணமாக சாதிக்பாஷாவை கத்தியால் குத்திக்கொலை செய்தார். இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாரதிதாசனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதுபோன்ற குற்றச்செயல்களில் அவர் தொடர்ந்து, ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரை செய்தார். அதைத் தொடர்ந்து, அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டார்.