india

img

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து மன்னிப்பு கோரியது என்சிஇஆர்டி!

நீதித்துறையில் ஊழல் என்ற பெயரில் பாடத்திட்டத்தை கொண்டு வந்ததற்கு உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி.
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) திங்கள் கிழமை வெளியிட்டுள்ள புதிய 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் “நீதித்துறையில் நிலவும் ஊழல்” மற்றும் வழக்கு களின் பெரும் தேக்கம் உள்ளிட்டவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” (The role of the judiciary in our society) என்ற தலைப்பிலான அத்தியாயத்தில், நீதித்துறையின் பல்வேறு நிலைகளில் நிலவும் ஊழல்; போதிய எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லாமை; சிக்கலான சட்ட நடைமுறைகள்; போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை; தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்டவைகளின் தொகுப்புகள் பாடமாக கொடுக்கப்பட்டுள்ளன. 
இதனை, தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், கடும்  கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், நீதிமன்றத்தை அவமதிக்க நினைப்பவர்களை எப்படி கையாள வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றும், இதில் தவறு செய்தவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யும் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி. மேலும், அந்தப் பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்குள் (2026-27) புதிய பாடம் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளது.