districts

மாதவரம் அகர்சன் கல்லூரியில் பல் மருத்துவ முகாம்

 சென்னை, செப்.4- சென்னை மாதவரத்தில் உள்ள அகர்சன் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டையொட்டி இலவச பல் மருத்துவ முகாம் கல்லூரி வளாகத்தில் வியாழனன்று (செப்.4) நடைபெற்றது.  சென்னை ரோட்டரி போயஸ் கார்டன் சங்கத்தின் தலைவர் ஹரிஷ் சாங்கி, சென்னை பெருநகர ரோட்டரி சங்கத் தலைவர் சங்கீதா விக்ரம் இணைந்து இம்முகாமை ஏற்பாடு செய்தனர். விழாவில் கல்லூரி தலைவர் ஸ்ரீ ஆதித்யா அகர்வால், துணைத் தலைவர் வினோத் சரோகி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரிஸ்டா பல் மருத்துவமனையின் செயற்கை பல்லியல் நிபுணர் இர்ஃபான், கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர்கள், முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.