காஞ்சிபுரம், செப்.4- நூறு நாள் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக, மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் வியாழனன்று (செப்.4) உத்திரமேரூரில் நடைபெற்றது. ஊதிய அட்டை பெற்ற அனை வருக்கும் நிபந்தனையின்றி தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக வேலை துவக்கம் வேண்டும். 2025-26 நிதியாண்டில் நான்கு மாதங்கள் கடந்தும் பல ஊராட்சி களில் வேலை வழங்கப்படாததை கண்டி த்தும். வேலை வழங்காத நாட்களுக்கு வேலையின்மை ஊதியம் தருவதை உறுதிப்படுத்த வேண்டும். தாமதமாக வழங்கப்படும் ஊதியத்திற்கு சட்டப்பூர்வ வட்டி சேர்த்துத்தர வேண்டும். திட்டத்திற்கான நிதியை 2.5 லட்சம் கோடி யாக உயர்த்த வேண்டும். தினக்கூலி 600 ரூபாயாக உயர்த்த வேண்டும். என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.தட்சணா மூர்த்தி தலைமை வகித்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் சி.சங்கர், வி.கே.பெருமாள், வி.சிவப்பிரகாசம், இ.ஆறுமுகம், பாளை யம், டி.தமிழ்செல்வன், சண்முகம் ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.