திருப்பூர், செப்.20- திருப்பூரில் பனியன் ஆடைகளைத் தைத்துக் கொடுக்கும் பவர்டேபிள் உரிமையாளர்களுக்கு சைமா உடன் ஏற்பட்ட ஒப் பந்தப்படி, கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி முதல் அமலாக்கி இருக்க வேண்டிய 7 சதவிகித கூலி உயர்வை உடனே அமல் படுத்த வேண்டும் என்று வலி யுறுத்தி திருப்பூர் தையல் நிலைய (பவர்டேபிள்) உரி மையாளர்கள் சங்க மகாசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்க மகாசபை கூட்டம் வெள்ளியன்று லட்சுமி நகர் குலாலர் திருமண மண்டபத்தில் சங்கத் தலை வர் ஆர்.நந்தகோபால் தலைமையில் நடை பெற்றது. இதில் சங்க செயற்குழு உறுப்பி னர் கருப்புசாமி வரவேற்றார். தலைவர் ஆர்.நந்தகோபால் தலைமை உரையாற்றினார். செயலாளர் கே.எஸ்.முருகேசன் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் எஸ்.சுந்தரம் வரவு செலவு விபரத்தை சமர்ப்பித்தார். இதையடுத்து தலைவராக ஆர்.நந்தகோபால், துணைத்தலைவராக எஸ்.நாகராஜன், செயலாளராக கே.எஸ்.முருகேசன், துணைச்செயலாளராக கருப்பு சாமி, பொருளாளராக எஸ்.சுந்தரம் மற்றும் 18 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டனர். இக்கூட்டத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதியன்று தென்னிந்திய பனி யன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) உடன் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, இந்த 2025 ஆம் வரு டம் ஜூன் 6ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டிய 7% புதிய கூலி உயர்வை உடனடி யாக அமல்படுத்த வேண்டும்.திருப்பூரில் புதிதாக அமையப்பெற்றுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நவீன மருத்துவ உப கரணங்களையும், சிறப்பு மருத்துவர்களை யும் உடனடியாக நியமிக்க வேண்டும் தமிழக அரசு தையல் நிலைய உரிமையாளர்களுக்கு விசைத்தறி உரிமையாளர்களுக்கு அளிக் கின்ற மின்சார மானியத்தை போல் 10 கே.வி அளவுக்கு கீழ் உள்ள தையல் நிலையங்க ளுக்கு மின்சார மானியம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க துணைத்தலைவர் எஸ்.நாகராஜன் நன்றி கூறி னார்.