தென்காசி, செப்.20- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்டக்குழு அலுவலக புதிய கட்டிட கட்டுமானப் பணியை மாநிலச் செயலா ளர் பெ.சண்முகம் அடிக்கல் நாட்டி, துவக்கி வைத்தார். கட்சியின் தென்காசி மாவட்டக்குழு அலுவலக புதிய கட்டிடம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஜெயம் நக ரில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் கல்வெட்டு திறப்பு விழா செப்டம்பர் 20 சனிக்கிழமை காலை மாவட்டச் செயலா ளர் பி.உச்சிமாகாளி தலை மையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.அயூப்கான் வர வேற்றுப் பேசினார். மத்தியக்குழு உறுப்பி னர் ஆர்.கருமலையான், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், விருது நகர் மாவட்டச் செயலாளர் அ.குருசாமி, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், அலுவலகம் அமைத்து மக்கள் பணி செய்கின்ற இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சாதி, மதம் கடந்து காதலிக்கிற இளைஞர்களுக்கு பாது காப்பான அலுவலகமாக நமது அலுவலகம் இருக்கும் என்பதை மாநிலக்குழு அறி வித்த பின்னர் எத்தனையோ பேர் நம்மை தொடர்பு கொண்டு திருமணத்தை நடத்திச் செல்கின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டக்குழு அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். கட்டிட நிதியளிப்பு மாவட்டக்குழு கட்டிட நிதியாக, காசோலையாக வும் பணமாகவும் தோழர் கள் 6 லட்சம் ரூபாய் அளித்த னர். தென்காசி தாலுகாச் செயலாளர் பட்டாபிராமன் நன்றி கூறினார். இந்த நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உ.முத்துப்பாண்டியன், டி.கண்ணன், எம்.தங்கம், பி.அசோக்ராஜ், வி.குண சீலன், டி.கணபதி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் கள், இடைக்கமிட்டிச் செய லாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.