கோவை, ஆக. 8 - பாஜகவின் ஊது குழலான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் மார்க் சிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக தலைமையிலான ஒன்றிய ஆட்சியில், தனித்துவத்தோடு, சுயேட் சையாக செயல்பட்ட பல ஆணையங் கள் பாஜகவின் துணை அமைப்புகளாக மாறிவிட்டது. இதில் தேர்தல் ஆணை யமும் அடங்கும். பாஜகவிற்கு எதிராக இருப்பவர்கள் என கருதப்பட்டால், அவர்களின் வாக்குரிமை பறிக்கப்படு வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக, பீகார் மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலை யில், அம்மாநிலத்தில் 65 லட்சம் வாக்க ளர்களை இந்திய தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்கள் என தகுதி நீக் கம் செய்து, ஜனநாயகத்தின் மீது பெரும் இடியை இறக்கி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த ஜன நாயக விரோத போக்கிற்கு எதிர்ப்பு தெரி வித்து நாடு முழுவதும் கண்டன இயக் கங்களை நடத்த மார்க்சிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்திருந்தது. இதன் ஒருபகுதியாக தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை சிவானந்தகாலனி, டாடா பாத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டச்செயலாளர் சி.பத்மநா பன் தலைமையேற்றார். இதில், கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ், மூத்த தோழர் யு.கே.வெள் ளிங்கிரி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.அஐய்குமார், வி.தெய்வேந்திரன் கே. எஸ்.கனகராஜ், ஆர்.கோபால், வி.ஆர். பழனிச்சாமி, என்.ஆர்.முருகேசன், என்.ஆறுச்சாமி, வி.இராமமூர்த்தி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். திருப்பூர் இதேபோன்று, திருப்பூர் மாநக ராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலக்குழு உறுப் பினர் கே.காமராஜ், மாவட்டச்செயலா ளர் மூர்த்தி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். சேலம் சேலம் கோட்டை அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மேட்டூர் கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.வசந்தி தலைமை ஏற் றார். இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்கண்ணன், அமைப்பு குழு உறுப்பினர்கள் ஏ.முரு கேசன், ஆர்.வைரமணி, கே.பச்சமுத்து, அன்பழகன், பவித்திரன் மற்றும் இடை கமிட்டி செயலாளர்கள் உள் ளிட்ட திராளனோர் பங்கேற்றனர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து தலைமை வகித்தார். இதில், மாநிலக் குழு உறுப்பினர் அ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரி முத்து, சி.நாகராஜன், சோ.அருச்சுனன், வேவிசுவநாதன், ஆர்.மல்லிகா, தி.வ. தணுசன் மற்றும் இடை கமிட்டி செயலா ளர்கள் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். ஈரோடு ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்ப் ்பாட்டத்திற்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.பழனிசாமி, ஆர்.விஜயராக வன், எஸ்.சுப்ரமணியன் ஆகியோர் கண் டன உரையாற்றினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வி. மாரிமுத்து, பி.சுந்தரராஜன் மற்றும் மூத்த தோழர் கே.துரைராஜ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ. ரங்கசாமி, எம்.அசோகன், ந.வேலுச் சாமி, எம்.ஆர்.முருகேசன் உள்ளிட்ட திர ளனோர் பங்கேற்றனர்.