சேலம் எஸ்.பி.யிடம் பாமக எம்எல்ஏ புகார்
சேலம், செப்.20- அன்புமணி ஆதரவாளர்களால் உயிருக்கு ஆபத்து உள்ளது எனக்கூறி, ராமதாஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பி னர் அருள், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயலி டம் புகாரளித்துள்ளார். சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பி னரும், பாமக மாநில இணை பொதுச் செயலாளருமான அருள், வெள்ளி யன்று மாவட்ட காவல் கண்காணிப்பா ளரிடம் புகார் ஒன்றை அளித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாமக சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வம், வாழப் பாடியில் ஒரு கடையில் தேநீர் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர், ‘அன்புமணி பற்றி சமூக வலைதளத்தில் தவறாக செய்தி போடு கிறாயா’ எனக்கூறி, கொலை செய்யும் நோக்கத்தோடு கத்தியால் தாக்க வந்துள்ளனர். அது சம்பந்தமான கண் காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளன. இதேபோல், ராமதாசுடன் சேர்ந்து பணி யாற்றக்கூடிய பொறுப்பாளர்களை சிலர் மிரட்டி வருகின்றனர். மிரட்ட லுக்கு பயந்து நாங்கள் புகார் கொடுக்க வரவில்லை. காவல்துறை மீது நம் பிக்கை வைத்துள்ளோம். காவல் கண் காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அன்புமணி ஆதரவாளர்களால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றார். மேலும், ராமதாஸ் தான் பாமக என்று மிக விரைவில் தேர்தல் ஆணை யம் அறிவிக்கும். மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு கொடுக்கவில்லை. மே 28 ஆம் தேதியோடு அன்புமணி தலை வர் பதவி முடிவுற்றது. 30 ஆம் தேதி முதல் பாமக தலைவராக ராமதாஸ் உள்ளார். பாமக தலைவராக இருக்கும் ராமதாஸ் தான் ஏ மற்றும் பி பார்மில் கையெழுத்து போட்டு வருகிறார். முகவரி மாறி அன்புமணிக்கு தேர்தல் ஆணைய கடிதம் சென்றது பற்றி, ஆணையரிடம் முறையிட்டு கடிதம் கொடுத்துள்ளோம். இதுசம்மந்தமாக நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கி றோம், என்றார்.