districts

img

துலுக்கமுத்தூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு

திருப்பூர், ஆக.8 - துலுக்கமுத்தூர் ஊராட்சி பால் உற் பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பாலில்  சோதனை மேற்கொள்ளாததால், அரசு நிர்ணயித்த தொகை கிடைக்காமல் பால்  உற்பத்தியாளர்கள் பல்வேறு இன்னல் களுக்கு ஆளாகி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பால் உற்பத்தியாளர் ஒருவர் கூறுகையில், அவிநாசி தாலுகா துலுக்கமுத்தூர் ஊராட்சியில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெறுகின்றன. பால் சொசைட்டிக்கு கொண்டு வரப்ப டும் பாலில் சோதனை மேற்கொள்ளப் படுவதில்லை. மேலும், பாலில் அதிக ளவு தண்ணீர் ஊற்றப்படுகிறது. ஒவ் வொரு முறையும் பாலில் உள்ள இப் பேட் மற்றும் எஸ்.என்.எப் சோதனை செய்து அதற்கு தகுந்த அரசு நிர்ண யித்த விலையை வழங்க வேண்டும். எடு த்துக்காட்டுக்கு இப்பேட் 4.0 மற்றும் எஸ்.என்.எப். 8.0 உள்ளது எனில் சுமார்  ரூ.33 வழங்க வேண்டும். அதேபோல் பாலின் தன்மைக்கு ஏற்ப அரசு விலையை நிர்ணயித்துள்ளது. இந்த  பால் கூட்டுறவு சங்கத்தில் முறையாக சோதனை செய்து அதற்கான ரசீது தரு வதில்லை. பிறகு சோதனை செய்து  கொள்வதாக கூறி ஏதோ ஒரு தொகையை தந்து அனுப்பி விடுகின்ற னர். இப்பேட் 4.5 மற்றும் எஸ்.என்.எப்.  4.5 இருந்தால் 35 ரூபாய் கூட கிடைக்கும்.  சோதனை செய்யாததால், பால் கொண்டு வருபவர்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. தனியார் பால்  சொசைட்டிகளுக்கு பால் கொண்டு சென்றால் உடனடியாக அதற்கான ரசீ தும் ஈடான தொகையும் தந்து விடுகின் றன. அரசு ஆவினில் அதற்கான வசதி கள் இருந்தும் செய்ய மறுக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கால் நடைகளை நம்பி வாழ்வாதாரம் நடத்தும் ஏழை எளிய விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.