districts

img

கோவை : மின்சாரம் தாக்கி யானை பலி

கோவை, ஜன.5–  கோவை ஈசா மையம் அருகே உள்ள தனியார் தோட்டத்தைச் சுற்றி அமைக்கப் பட்ட வேலியில், மின்சாரம் தாக்கி யானை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான ஆலந்துறை, வெள்ளியங்கிரி மலை பகுதிகளில் காட்டு யானைகளின் வலசை பாதைகள் உள்ள தால், யானைகளின்  நடமாட்டம் காணப்படு வது வழக்கம். தற்போது, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் சோளம், வாழை, நெல், பயிரிடப்பட்டுள்ளதால் உணவு தேடி நாள்தோறும் யானைகள் அப்பகுதிக்கு வரு வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் திங்க ளன்று இரவு போளுவாம்பட்டி வனச்சரகத் திற்குட்பட்ட  ஈசா யோகா மையம் உள்ள செம்மேடு கிராமத்திற்குள் 2 ஆண் யானை கள் தனித்தனியாக வந்துள்ளது. இது குறித்து அப்பகுதியினர் வனத்துறையின ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் ஒற்றை ஆண் யானையை செவ்வாயன்று அதிகாலை முள்ளாங்காடு வனப்பகுதிக்குள் விரட்டி னர். மற்றொரு யானை செம்மேடு குளத்து ஏரி பகுதியில் உள்ள துரை என்பவரது விவசாய நிலத்திற்குள் புகுந்துள்ளது. அங்கிருந்து வெளியேறும்போது வயலை சுற்றி போடப் பட்டிருந்த உயர் மின்னழுத்த வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதனைய டுத்து போளுவாம்பட்டி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் மின் சாரம் தாக்கி உயிரிழந்த யானைக்கு 22 வயது இருக்கும் எனவும், பிரேதப் பரி சோதனையின் முடிவில் முழு விவரம் தெரிய வரும் என மாவட்ட வன அலுவலர் வெங்க டேஷ் தெரிவித்தார். தொடர்ந்து, இப்பகுதி யில் அடுத்தடுத்து யானைகள் பலியாவது வனஆர்வலர்கள் மத்தியில் பெரும் வேதனை ஏற்படுத்தியுள்ளது.

;