tamilnadu

img

நிலையான வேலையை இழந்த 41 லட்சம் பேர், இளைஞர்கள்... ஐஎல்ஓ - ஏடிபி அதிர்ச்சித் தகவல்

புதுதில்லி:
இந்தியாவில், ‘வொயிட் காலர்ஜாப்’ எனப்படும் அதிக சம்பளத்துடன் கூடிய நிலையான வேலைவாய்ப்பில் இருந்துவந்தவர்கள், கொரோனா தாக்கத்திற்கு பிந்தையகாலத்தில் பெரிய அளவிற்கு வேலையிழந்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization -ILO) மற்றும்ஆசிய வளர்ச்சி வங்கியின் (Asian Development Bank- ADB) ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு அமைப்பு ((Centre for Monitoring Indian Economy - CMIE) அண்மையில் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதில்,‘வொயிட் காலர் ஜாப்’ எனப்படும் நிலையான வேலைவாய்ப்பில் இருந்து வந்த 1 கோடியே 89 லட்சம் பேர், கொரோனா காலத்தில் தங்களின் வேலையை பறிகொடுத்திருப்பதாக கூறியிருந்தது.இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்புச் சந்தையில், நிலையான வேலைவாய்ப்புகளைக் எடுத்துக் கொண்டால், அவை வெறும் 21 சதவிகிதம்தான் என்றாலும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை கட்டமைப்பிற்கு மிகவும் முக்கியமானது என்பதால், 1.89 கோடி பேரின்வேலையிழப்பு இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிஎம்ஐஇ தெரிவித்து இருந்தது.

இதையே தற்போது சர்வதேச தொழிலாளர் அமைப்பும், ஆசியவளர்ச்சி வங்கியும் தங்களின்அறிக்கையில் உறுதிப்படுத்தியுள் ளன. இவ்வாறு வேலையிழந்தவர் களில் சுமார் 41 லட்சம் பேர் இளைஞர்கள் என்ற அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளன.மூன்றில் இரண்டு பங்கு நிறுவனத்தில் அப்பரண்டீஸ் மற்றும் அடுத்த 3 காலாண்டுகளுக்கு இன்டர்ன்ஷிப் வேலைவாய்ப்புகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.இந்தப் பாதிப்பால் தற்போது வேலைவாய்ப்பில் இருப்பவர்களை விடவும் 15 முதல் 24 வயதுடைய மாணவர்கள், பட்டதாரிகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். இந்தப் பாதிப்பின் எதிரொலி அடுத்த சில வருடங்கள் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.