districts

‘பிரெய்லி’ கடிகாரம் பரிசு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 500-க்கு 477 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்த பார்வை திறன் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி மாணவர் வா. மதனைப் பாராட்டி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் கே.பி.பாபு, பிரெய்லி கைக்கடிகாரம், புத்தகங்கள் வழங்கினார். மாவட்ட பொறுப்பாளர் ஆர். மதுசூதனன், தலைவர் பி.பி. பாலாஜி, செயலாளர் வி. முனுசாமி, பொருளாளர் வி. அரிகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

;