districts

பள்ளிக்கல்வித் துறையின் உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக! இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, டிச.28- திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார்  பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தாமல் இருக்க பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.  இது தொடர்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவர் சூர்யா பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது : திருச்சி மாவட்டத்தில் செயல்படும் தனி யார் பள்ளிகள் அரசு உத்தரவினை அலட்சி யப்படுத்துகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த அரையாண்டு தேர்வு களையொட்டி மாணவர்களுக்கு விடு முறை விடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லா மல் மாணவர்களின் மன அழுத்தத்தினை குறைக்கக் கூடிய வகையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.  ஆனால், இதனை தனியார் பள்ளிகள் கடைப்பிடிப்பது கிடையாது. சிறப்பு வகுப்பு களுக்கு என கட்டணத்தை நியமித்து அதனை வசூலிப்பதற்கு தனியார் பள்ளிகள் தயா ராகி வருகிறது.  உடனடியாக பள்ளிக்கல்வித்துறை தனி யார் பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை தடுத்து  நிறுத்த வேண்டும். மேலும், பள்ளிக்கல்வித்துறையின் உத்த ரவை மீறும் தனியார் பள்ளிகள் மீது உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு வகுப்பு நடத்தாமல் இருக்க பள்ளிக்  கல்வித்துறை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  மனு கொடுக்கும் போது, மாவட்ட துணைத் தலைவர் மாரியம்மாள், மாவட்ட துணைச்செயலாளர் ஆர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜெனிபர் ஆகி யோர் உடனிருந்தனர்.