tamilnadu

img

இந்துத்துவா கருத்து திணிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழக அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, அக். 24- பள்ளி-கல்லூரிகளில் இந்துத்துவா கருத்தை திணித்து மாணவர்களை பிளவுபடுத்தும் பயங்கரவாத சக்திகளை உடனடியாக தடுத்து நிறுத்த  வேண்டும் என்று மாநில அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் வேண்டு கோள்விடுத்திருக்கிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், செய லாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் விடுத்தி ருக்கும் அறிக்கை வருமாறு:- தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரி களில் இந்து மதம் சார்ந்த மாணவர் களை ஒருகிணைத்து இந்து மதத் தலை வர்களின் வரலாறு, இந்து மதம் சார்ந்த பக்தி, ஒழுக்கம், இதிகாசம்,  புராணம் மற்றும் இந்து பெண்களை காத லிப்பவர்களை (லவ்ஜிகாதி) எதிர்த்து செயல்பட இந்து மாணவர் முன்னணி, இந்து இளைஞர் முன்னணி என்ற பெயரில் இந்துத்துவ மதவெறி கருத்தை புகுத்தும் அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும், அதற்கென ஒவ்வொரு வளாகத்திலும் 10 பேர் கொண்ட குழு அமைத்திருப்பதாகவும் பள்ளி கல்வி இணைச் செயலாளர் வெங்கடேசன் மூலம் செப்டம்பர் 20 ஆம்  தேதியிட்ட அறிக்கையின் வாயிலாக ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் தற்போது தெரியவந்துள்ளது. மத்தியில் பாஜக அரசு ஆட்சி  பொறுப்பிற்கு வந்தது முதல் இதுவரை 600 மேற்பட்ட மதக்கலவரங்கள், கொடூரமான கும்பல் படுகொலை கள், முற்போக்கான எழுத்தாளர்கள், கலைஞர்கள் மீதான படுகொலைகள், கொடூர தாக்குதல்கள், பொய்வழக்கு கள் என அதிகரித்து வருகிறது. நாட்டில்  நிலவிவரும் வேலையின்மை, பொருளா தார சரிவு, கல்வி மற்றும் சுகாதார சீர்கேடு களை மறைக்க இது போன்ற கலவ ரங்களை, வன்முறை கருத்துகளை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் பாஜகவின் வெறுப்பு அரசியல் எடுபடாததால் எப்படியாவது கலவரங்களை தூண்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு தற்போது பள்ளி கல்லூரிகளில் மாணவர்களை இந்து மதம் என்ற போர்வைக்குள் ஒழிந்து பயங்கரவாத கருத்தை தூண்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே மதபயங்கரவாத கருத்தோடு செயல்பட்டுவரும் ஏபிவிபி அமைப்பின் பணியை துரிதப்படுத்தவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் திட்டமிட்டு இந்து மாணவர் முன்னணி எனும் பெயர்களில் களம்மிறக்கி உள்ளதை பள்ளி கல்வி துறை அறிக்கை மூலம் உறுதிசெய்து கொள்ள முடிகிறது. செப்டம்பர் 12 ஆம் தேதி பொதுத்துறை செயலாளர் மூலம் பள்ளி  கல்வி மற்றும் உயர்கல்வி துறைக்கும், செப்டம்பர் 20 ஆம் தேதி பள்ளிகல்வி இணைச் செயலாளர் மூலம் இயக்கு நர்களுக்கும், இயக்குநர்கள் மூலம்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்க ளுக்கும் அதேபோல் உயர்கல்வி துறை மூலம் கலை அறிவியல் கல்லூ ரிக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்ட விவரம் ஊடகங்கள் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது.  ஆனால் பள்ளிகல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் எந்த அறிக்கையும் அனுப்பப்படவில்லை என மறுக்கிறார். இதற்கு முன்பு கூட  சாதியை அடையாளப்படுத்தும் கயிறு களை மாணவர்கள் கட்டியுள்ளது குறித்து பள்ளி கல்வி துறை சுற்ற றிக்கை அனுப்பியி ருந்தபோதும் இதே போல் மறுத்தார். கல்வி அதிகாரிகள்  எடுக்கும் சில நல்ல முயற்சிகளை  தடுக்கும் அமைச்சரின் இந்நடவ டிக்கையை கண்டிக்கின்றோம். இப்பிரச்சனையை நமது தமிழக  மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனிலிருந்து இதை அணுகவேண்டும். தேச ஒற்றுமை, சமூகநல்லிணக்கம், மதசார்பின்மையை பாதுகாக்க உட னடியாக இச்சீரழிவு சக்திகளை இனம் கண்டு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். மேலும் இந்து  மத பெயரை பயன்படுத்தி அடிப்படை வாத கருத்தில் இயங்கும் அமைப்பு களை உடனடியாக தடைசெய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி வித்திருக்கிறார்கள்.