tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்திடுக

நாமக்கல், ஜூலை 14- புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்திட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  இந்திய மாணவர் சங்க நாமக்கல் ஒன்றிய 3 வது மாநாடு சந்தப்பேட்டை புதூரில் மாவட்ட குழு உறுப்பினர் கோகுல் தலைமையில் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்ட செயலாளர்  இரா.முருகேசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் இரா.மாதேஷ் வாழ்த்தி பேசினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட தலை வர் எம்.தேன்மொழி, மாவட்ட செயலாளர் டி.சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, இம்மாநாட்டில் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் அமைத்துத் தரவேண்டும். மாண வர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும். அரசு பள்ளிகளை பாதுகாத்திட வேண்டும். புதிய கல்விக் கொள் கையை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து, புதிய ஒன்றியத் தலைவராக ஜீவா, செயலாளராக கார்த்தி உள்ளிட்ட 17 பேர் கொண்ட ஒன் றிய குழு தேர்வு செய்யப்பட்டது.