districts

img

பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் திருவிக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச.30-  திருவாரூரில், திருவிக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் தற்காலிகமாக பணியாற்றி வரும் உடற்கல்வி உதவி பயிற்சி ஆசிரியர், மாணவிகளுக்கு செய்த ஒழுங்கீன செயல்களுக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி யும், அண்ணா பல்கலைக்கழக மாண விக்கு நிகழ்ந்த வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்தும், திருவிக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியைச் சார்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்திலும் அதன்பிறகு உள்ளிருப்பு போராட் டத்திலும் ஈடுபட்டனர். இந்திய மாண வர் சங்க மாநில துணைத்தலைவர் பா.ஆனந்த் தலைமை வகித்தார்.  திருவிக கல்லூரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  தற்காலிகமாக பணியாற்றும் உடற்கல்வி உதவி பயிற்சி ஆசிரியர் மதிவாணன் என்ப வர், அதே கல்லூரி மாணவி ஒருவரி டம் தொலைபேசியில் ஆபாசமாகவும், தன்னுடைய ஆசைகளுக்கு இணங்க வலியுறுத்தியும் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் திருவிக கல்லூ ரியில் பயிலக்கூடிய மாணவிகள் 500 க்கும் மேற்பட்டோர், அண்ணா பல்கலைக்கழக பிரச்சனை தொடர்பா கவும், திருவிக கல்லூரியில் நடை பெற்ற பிரச்சனை தொடர்பாகவும் நீதி கேட்டு கல்லூரி வளாகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்திலும், கல்லூரிக்குள் சென்று உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.  கல்லூரியில், பெண் உடற்கல்வி உதவி ஆசிரியை வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு உரிய நிவாரண நடவடிக்கை வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட உடற்கல்வி உதவி பயிற்சி ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் என கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சுகதே, மாவட்டத் துணைத் தலைவர் சந்தோஷ், கிளை தலைவர் செல்வபிரகாஷ் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.