districts

img

தனியார் மயமாக்கப்படும் மின்துறை பாஜக அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை, ஜன.1- பாஜக ஆளும் மாநிலங்களில் மின் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக் கையை கண்டித்து கோவையில் அனைத்து மின்வாரிய பணியாளர்கள் ஒரு மணி நேர  வேலை புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சண்டிகர், உத்தரபிரதேச மாநிலங்களில் மின்துறையை தனியார்மயமாக்கும் நடவ டிக்கையை நிறுத்த வேண்டும். தனியார் மய மாக்கலை எதிர்த்து போராடும் மின் ஊழியர் களை எஸ்மா சட்டத்தை கொண்டு மிரட்டக் கூடாது. மின்துறையை தனியார்மயமாக்கும்  முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். என சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் யுடி மின் சாரத் தொழிலாளர்கள் மற்றும் பொறியா ளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். சண்டிகர் தொழிலாளர்க ளுக்கு ஆதரவாக மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களின் தேசிய ஒருங்கிணைப்பு குழு விடுத்துள்ள அறைகூவலின்படி செவ் வாயன்று மதியம் 12 மணியிலிருந்து 1 மணி வரை இந்திய நாடு முழுவதும் வேலை புறக் கணிப்பு செய்தனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் தமிழ் நாடு மின்சார வாரிய  தொழிற்சங்க கூட்டு  நடவடிக்கைக்குழு சார்பில், ஐக்கிய சங்க நிர்வாகி க.வீராச்சாமி தலைமையில் பணி புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கோவை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட் டத்தில், மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மண் டலத் தலைவர் டி.கோபாலகிருஷ்ணன், எம்ப்ளாயீஸ் பெடரேசன் மாநிலத் தலைவர், ஜெ.எல்.பாஸ்டியன்ராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் திரளானோர் பங் கேற்றனர்.