districts

img

சாதியத்தை தகர்க்க குடும்பங்களை ஜனநாயகப்படுத்த வேண்டும் புத்தாண்டு கலை மாலையில் ஆதவன் தீட்சண்யா அழைப்பு

திருப்பூர், ஜன.1– சாதியின் மிகச்சிறிய அலகுக ளாக குடும்பங்கள் இருக்கின்றன.  பொதுவெளியில் சாதி அற்றவர்க ளாக இயங்கப் பழகியிருந்தாலும், குடும்பத்திற்குள் சுத்த சாதிக்காரர்க ளாக செயல்படுகிறோம். எனவே  குடும்பங்களை ஜனநாயகப்படுத் துவது அவசியம் என  தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட் சண்யா கூறினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்  சங்கம் இணைந்து 2025 புத் தாண்டை வரவேற்று திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் செவ் வாயன்று “சாதியம் தகர்ப்போம், மனிதம் வளர்ப்போம்!” என்ற கலை  மாலை நிகழ்ச்சி நடைபெற்றது.  உலகளாவியதாக மாறும் சாதியம் இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட் சண்யா பேசுகையில், சாதியம் இப் போது உலகப் பிரச்சனையாக மாறி  உள்ளது. இந்தியா, தெற்காசியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கி லாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் சாதியம் பிரச் சனையாக கருதப்படுகிறது. இந்தியாவில் சாதியின் பெயர் களை வரிசையாக எழுதி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என படித் தால், 355 நாட்கள் படிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் சாதிப் பெயர்களை படிக்க முடி யும் என்று நிதி ஆயோக்கின் அர விந்த் பனகரியா சொல்கிறார்.  இத்தனை சாதி, உட்சாதி இருந் தாலும் ஒரு சாதியும், உட்சாதியும் சமம் என்று சொல்லாது. சாதி பாகு பாடுகள் தீட்டு, புனிதம் என்ற கருத் தாக்கத்தின் வழியாக நிலை நிறுத் தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சாதியும் தன் சாதியைப் பற்றி பெரு மிதமான கற்பிதங்களை வைத்தி ருக்கின்றன. இதில் மற்ற சாதிகள் இழிவானவை என்று கற்பிதம் செய் வதை சாதி நம்பிக்கை இருப்பவர் கள் உண்மை என நம்புகிறார் கள். சாதி ஒருபோதும் மாற்றத்தக்க தல்ல. நீங்கள் மதம், கடவுள், உடை,  உணவு, இருப்பிடம் என மாற்றிக் கொள்ளலாம். ஆனால் மாற்றிக் கொள்ளவே முடியாத ஒன்றாக சாதியம் இருக்கிறது. பிறப்பில் இருந்து இறப்பு வரை,  இறப்புக்குப் பிறகும் சாதி நம்மை  வழி நடத்துகிறது. சாதி மக்கள் தொகையில் சரிபாதியாக இருக் கும் பெண்களை சமமாக ஏற்காது.  சாதி அமைப்பினால் ஆதாயம் அடைவோர் அதை வளர்க்க வேண்டும் என்பார்கள். ஏற்றத் தாழ்வு எந்த வடிவத்தில் இருந்தா லும் அதைப் போக்க வேண்டும் என சொல்லும் செயல்பாட்டாளர்கள் பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ் டுகள், மார்க்சிஸ்டுகள் அதை ஒழித்துக் கட்ட வேண்டும் எனச் சொல்வார்கள். பொத்தாம் பொதுவாக சாதி யத்தை ஒழிப்போம் எனப் பேசுவது  மேனாமினிக்கித்தனம். அதைக் கைவிட வேண்டும் குறிப்பான விச யங்களில் பேசுவதுதான் மார்க்சி யம். சாதி எங்கே இருக்கிறதோ  அங்கே அதை கவனத்தில் கொண்டு அதை எப்படி களையப் போகி றோம், விடுவித்து கொள்ளப் போகிறோம் என்று பேச வேண் டும். சாதி அப்படியே இருக்கட்டும், தீண்டாமையை ஒழிப்போம் என் பது சாக்கடை அப்படியே இருக்கட் டும், நாற்றம் மட்டும் வரக்கூடாது என்பதுதான்! சாதியை மறு உற்பத்தி செய்யும் குடும்பம் சாதியை மறு உற்பத்தி செய்யக் கூடியதாக குடும்பங்கள் இருக்கின் றன. பழக்க, வழக்கங்கள் சொல் லித்தர கூடியதாக, சாதி கலப்பே வந்துவிடக்கூடாது என்று சொல்லி கொடுக்கக் கூடியதாக குடும் பம் இருக்கிறது. குடும்பம் என்பது சாதியின் ஆகச்சிறிய ஓர் அலகு.  இதுதான் சாதியை மறு உற்பத்தி செய்கிறது. எனவே குடும்பத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும்.  ஏனென்றால் சாதி பிறப்பின் அடிப்படையில் செயல்படுகிறது. யாரை திருமணம் செய்யலாம், யாரை திருமணம் செய்யக் கூடாது என்று எல்லைதான் சாதி.  சாதிக்கான சாஸ்திரங்கள், சட்ட விதிகள், தர்மங்கள் ஆகியவற்றை நடைமுறை வாழ்க்கையில் மீறி  இருக்கிறோம். ஆனால் விஸ்வ கர்மா திட்டம் என கொண்டு வந்தி ருக்கின்றனர். குலத்தொழில் என  18 சாதிகள் பிரித்து நவீன முறையில்  குறிப்பிட்ட தொழிலை, குறிப் பிட்ட சாதிதான் செய்ய வேண்டும் எனச் சொல்கின்றனர். தலித்துகளின் பிரச்சனை மட்டுமல்ல சாதியம் என்பதை பட்டியல் சமு கத்தில் இருக்கக்கூடிய 76 சாதிக ளின் பிரச்சனையல்ல, சாதியம்  ஒவ்வொருவரின் சிந்தனை, செயலி லும் குறுக்கீடு செய்து கொண்டு வழி நடத்துகிறது. பிறந்த குழந்தைக்கு  முதல் ஆகாரம் எதைக் கொடுப்பது என்று சாதிதான் சொல்கிறது. சாதி யின் வழிகாட்டுதலை குடும்பத்தில்  துளியளவும் நழுவாதவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்கி றோம். இது எல்லோரின் பிரச்சனை. ஒருவரை ஒருவர் கண்காணிக் கக்கூடியவர்களாக, சந்தேகிக்கக் கூடியவர்களாக ஒவ்வொருவரின் பிரச்சனையாக சாதி நம்மை மாற் றிக் கொண்டிருக்கிறது. மனிதர் களை மனிதத்தன்மையில் இருந்து  கீழ் இறக்கி மிருகங்களும் செய்யத் துணியாத, அஞ்சுகின்ற செயலைச் செய்ய வைக்கிறது. ஒரு மதிப்பு, சம மதிப்பு ஒரு மனிதர் தோற்றத்தில் இருப் பதைப் போலவே நடத்தையிலும், பண்பிலும் மனிதர்களாகவே இருக்க வேண்டும் என்பதை 2025 இன் நோக்கமாக வைத்துக் கொள் ளலாம். இன்னொருவரை சமம்  என்று நினைக்கக்கூடிய, ஒருவ ருக்கு ஒரு மதிப்பு என்ற உயரிய பண்பை இந்த நாட்டு அரசியல் சாச னம் வழங்கியிருக்கிறது. அந்த அர சியல் சாசனம் வழங்கியிருக்கும் பொறுப்புள்ள குடிமக்களாக ஒருவ ருக்கு ஒரு மதிப்பு, அது சம மதிப்பு  என்பதை நாம் தேர்ந்து கொள் வோம் என்றார். முன்னதாக நிகழ்வுக்கு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ச.நந்தகோ பால் தலைமை ஏற்றார். கவிஞர்  நறுமுகை தலைமையில் கவிய ரங்கம், உடுமலை துரையரசன், திருப்பூர் கிருஷ்ணனின் மண்ணி சைப் பாடல்கள், திருப்பூர் கலைக் குழுவின் நாடகம் நடைபெற்றது. ஞானசேகர் நன்றி கூறினார்.