districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

பெரம்பலூர், நவ.20 - பெரம்பலூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில், மாற்றுத்திறனா ளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் கிரேஸ் பச்சாவ் தலை மையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், ஒவ்வொருவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து அவற்றை நிறை வேற்ற உரிய அலுவலர் களுக்கு உத்தரவிட்டார்.    தொடர்ந்து 10 மாற்றுத் திறனாளிகளுக்கு கண்ணாடி, சி.பி வீல்சேர், எல்போ ஊன்று கோல், பார்வையற்றோருக்கான கை கடிகாரம், கார்னர் சீட் உள்ளிட்ட ரூ.42,384 மதிப்பிலான பல்வேறு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி,  மாற்றுத்திறனாளிகளிட மிருந்து பல்வேறு கோரிக் கைகள் அடங்கிய 63 மனுக் களைப் பெற்றுக் கொண்டார்.