திருச்சிராப்பள்ளி, ஜன.31 - பொதுத்துறை நிறுவனமான மின் வாரியத்தை கம்பெனிகளாக பிரித்து தனியாரிடம் கொடுத்ததையும், லாபத்தில் இயங்கும் மின்சார நிறுவனங்களை குறைந்த விலைக்கு தனியாருக்கு விற்பனை செய்ததை கண்டித்தும், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், சண்டிகர் மாநிலங்களில் போராடும் மின்வாரிய ஊழியர்கள், பொறியா ளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ்நாடு மின் ஊழியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி ஐக்கிய சங்க பொறுப்பாளர் சதீஷ், டி.என்.இ.பி.எஸ். சங்க செயல் தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டத் தலைவர் நடராஜன், வட்டச் செயலா ளர் பழனியாண்டி, வட்ட துணைத்தலை வர் எஸ்.கே.செல்வராஜ் ஆகியோர் பேசினர். இதேபோன்று மன்னார்புரம், லால் குடி, வெள்ளனூர், துறையூர், மணப் பாறை, புள்ளம்பாடி, அய்யம்பா ளையம், மணிகண்டம், அரியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பெரம்பலூர் பெரம்பலூர் மின் செயற்பொறியா ளர் அலுவலகம் முன்பு வெள்ளிக் கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.