திருப்பூர், ஜன.31- திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணி புரியும் கௌரவ விரிவுரையாளர்கள் புதனன்று கோரிக்கை களை வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்த போராட்டத்திற்கு பேராசிரியர் முனைவர் கா.காளி தாஸ் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது தங்களை பணி நிரந்தரம் செய்திடவும், அதுவரை யு.ஜி.சி பரிந்துரைத்த குறைந்தபட்ச ஊதியம் ரூ. 57 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தினர். பேராசிரியர் முனைவர் எஸ்.ராஜ்குமார் விளக்கவுரை ஆற்றினார். பேராசிரியர் கே.கே.விஸ்வநாதன் நன்றி கூறினார்.